பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 637

பெற்ற புட்பக விமானத்தில் அமர்ந்து வான்வழியே செல்பவன், தனது போக்குக்குத் தடைவிளேக்கும் முறையில் திருக்கயிலாயமலே குறுக்கிட்டு நின்றதனேக் கண்டு வெகுண்டு அதனைப் பெயர்த்தெடுக்கத் தலைப் பட்டான். ஆற்றல்மிக்க அரக்கணுகிய அவன் சிவபெரு மான வழிபடும் திறமுடையவனாக இருந்தும் ஆன்மா வுக்கு இயல்பாக அமைந்த ஆணவ மலத்தின் விளே வாக அவன் மனத்தே செருக்கு மேலிட்டதல்ை இறை வன் வீற்றிருக்கும் சிறப்புடைய திருமலை திருக்கயிலா யம் என்பதனேக் கருத்திற்கொள்ளாது ஏனைய மலே களேப்போல் அதனையும் எளிதாக எண்ணி இகழ்ந்து அதனைத் தூக்க முயன்றன். அவனது முயற்சி தவருனது, தீமைவிகாப்பது என்பதனையுணர்ந்த தேர்ப் பாகன், கடவுள் வீற்றிருக்குந் திருமலையாகிய கயிலே யைப் பெயர்த்தெடுத்தல் அடாத செயல் என இரா வணனுக்கு எடுத்துக்காட்டியும் அவன் அச்சொல்லே மதியாமல் இகழ்ந்து கூறி வெகுண்டு தருக்கில்ை கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்கின்றன். அந்நிலேயில் அருளாளனுகிய இறைவன், அரக்கனது தருக்கினே யொழிக்கத் திருவுளங்கொண்டு தனது திருவடிப் பெரு விரலொன்றில்ை அம்மலையின்மீது ஊன்றியழுத்தின்ை மலேயும் அழுந்தியது. அப்பொழுது இருபது கைகளா லும் கயிலாயத்தைப் பெயர்த்தெடுத்த இராவணன், தன்னுடைய பத்துத் தலைகளும் மலையிடையிற் சிக்கி யழுந்த வருத்தமுற்று ஆற்ருது அழுதான். பின் சிறிது தெளிவுபெற்றுத் தன், தலைகளுள் ஒன்றை வெட்டி யெடுத்துப் பக்தராக அமைத்து முன்கை நரம்பினே நரம்பாகக் கட்டி வீணே யென்னும் இசைக் கருவியின அமைத்துக்கொண்டு சாமவேதமாகிய இசைப்பாடல் களேப் பாடி இறைவனைப் போற்றினன். அரக்கனது இசைத் திருத்தொண்டுக்குத் திருவுளமிரங்கிய அருளா ள கிைய சிவபெருமான், அரக்கணுகிய அவனுக்கு