பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642

பன்னிரு திருமுறை வரலாறு


பிள்ளையாரருளிய இவ்வுறுதியுரையின் மெய்ம்மை யினே யுணர்ந்த பெருமக்கள் இவரை ஆணே நமதென்ற பெருமாள் எனப் பாராட்டிப் போற்றிய துடன் இப்பெயரை மக்களுக்கு இட்டும் வழங்கி யுள்ளார்கள் எனத் தெரிகிறது.”

ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே '

என இறைவன் பால் முறையிட்ட சிவஞான ச் செம்மலார், இவ்வாறு தாம் பாடிய ஒவ்வொரு திருப்பதிகத்தின் முடிவிலும் அத்திருப்பதிகத் ைகப் பாடிய தமது பெயரையும். அப்பதிகத்தினே அன்புடன் நெஞ்ச நெக்குருகி ஒதுவார் பெறும் நலங்களேயும் தவருமல் உடன் அருளிச் செய்திருப்பதன் நோக்கம், குறித்த அவ்வொரு திருப்பதிகத்தையேனும் கற்றுப் பாடுவோரும் தாம் பெற்ற சிவா நுபவப் பயனே எளிதிற்பெற்று இன்புற வேண்டுமென்னும் பெருங் கருனேயே என்பர் பெரியோர்."

இவ்வாறு திருஞான ச ம் ப ந் த ர் அருளிய திருப்பதிகங்கள் யாவும், இறைவன் ஒருவனுளன் என்பதற்குரிய பிரமாணங்களையும், அம்முதல்வனுக் குரிய பொதுவும் சிறப்புமாகிய இலக்கணங்களேயும், இறைவனே வழிபடுதற்கு இன்றியமையாத சாதனங் களேயும், அங்ங்ணம் உணர்ந்து வழிபாடு செய்யும் அன்பர்கள் பெறும் பேரின்ப வாழ்வாகிய நற்பயனையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்திருத்தல் உணர்ந்து

2. ஒளவை துரைசாமிபிள்ளேயவர்கள் எழுதிய சைவ இலக்கியவரலாறு பக்-109.

  • கா. சுப்பிரமணியபிள்ளேயவர்கள் எழுதிய திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம், பக்-41-46.