பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652

பன்னிரு திருமுறை வரலாறு


இரண்டா ந் திருமுறையில் அமைந்த பூமகனுளர்' என்னும் முதற்குறிப்புடைய திருப்பிரமபுரத் திருப்பதி தம், கோமூத்திரி என்னும் சித்திரக வியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. கோமூத்திரியாவது, ஒரு செய்யுளின் முன்னிரண்டடிகளே மேல் வரியாகவும் பின்னிரண்டடி களைக் கீழ்வரியாகவும் வரைந்து, அவ்விரண்டு வரி களின் எழுத்துக்களே மேலும் கீழுமாக ஒன் றிடையிட்டு வாசித்தாலும் அதே செய்யுளாய் அமையும் சித்திர கவியாகும். இதன் கண் மேலும் கீழுமுள்ள வரிகளில் அமைந்த எழுத்துக்கள், கோமூத்திர ரேகைபோல் ஒன்றிடையிட்டு வாசிக்கப்பெறுதலின் கோமூத்திரி எனப்பட்டது. கோமூத்திரி எனப் பிற்காலத் தார் கூறும் பாடலமைப்பு மேற்குறித்த "பூமகனுார்’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் இருப்பதாகப் புலப்படவில்லே. இப்பதிகத்திற்குப் பிள்ளே யார் இட்ட பெயர் கோமூத்திரியென்பதன்று; வழிமுடக்குமாவின் பாச்சல் என்பதே இப்பதிகப் பெயராகும். இதன் பெயர்க் காரணம் நன்கு விளங்கவில்லே. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் ண்ணப்பெற்றுள்ளன. ஒரு பாட லின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்ன ப் பெறும் நிஜலயில் அமைந்த இப்பதிகம், முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்ருற்போலும் நடை அமைப்பினேயுடைய தாதல் இங்கு நோக்கத் தகுவதாகும்.

மூன்ருந் திருமுறையில் 109-ஆம் பதிகமாகவுள் ளது ‘மண்ணது வுண்டரி என்னும் முதற் குறிப் புடைய திருப்பதிகமாகும். இது கூடற் சதுக்கம் என்றும் கூட சதுக்கம் என்றும் குறிக்கப்பெற்றுளது. ஒரு செய்யுளின் நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள்