பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 659

9. இறைவனுக்கு உவப்பாய தலம் இதுவென்றும் இதனை வ ழி ப டு மி ன் என்றும் உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நெறியில் அமைந்த பதிகங்கள் பல.

  • வன்னி கொன் றைமத மத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராண னுர் தென்ன வென்று வரி வண்டு பண் செய் திருவாஞ்சியம் என்னே யாளுடையா னிடமாக வுகந்ததே ?

2–7-1 எனவும்,

இறையவன் ஈசனெந்தை யிமையோர் தொழுதேத்த

நின்ற கறையணி கண்டன்வெண் தோடணி காதினன்

காலத்தன்று மறைமொழி வாய்மையின்ை மலேயாளொடு

மன்னு சென்னிப் பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே?

3-56-1 எனவும் வரும் பதிகங்கள் போல்வன இவ்வகையில் அடங்குவனவாம்.'

10. திருஞானசம்பந்தர் தாம் கண்டு வணங்கிய திருத்தலங்களின் எழிலேயும் அங்கே கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவனுடைய திருமேனி வண்ணத் தினே யும் கருதிப் பரவும் நிலேயிலும், இறைவன் திருவடி களில் நறுமலர்தூவி அருச்சித்துப் போற்றும் நிலையிலும் அருளிய திருப்பதிகங்கள் பலவாகும்.

' வரிவள ரவிரொளி யரவரைதாழ வார்சடை முடிமிசை

வளர்மதிசூடிக் கரிவளர் தருகழல் கால்வலனேந்திக் கண்லெரியாடுவர்

காடர கிகாக விரிவளர் தருபொழில் இளமயிலால வெண்ணிறத்

தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணிசாரல் இடைச்சுர மேவிய

இவர்வண மென்னே (1-78-1) எனவும்,

1. திருமுறை 11.189, 6 நோக்குக.