பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 66;

13, பிள்ளையார் ஏனேயடியார்களேயும் தம்மோடு உளப்படுத்தி உள் குதும், பரவுதும், போற்றுதும் என இறைவனேப் போற்றிப் பரவும் திருப்பதிகங்களும் சில

@_6f。

" மாறிலவுனரர ணம்மவை மாயவோர்

வெங்கணேயா - லன்று நீறெழவெய்த வெங்கள் நிமலனிடம் வினவில் தேறலிரும் பொழிலுந் திகழ் செங்கயல்பாய்

வயலுஞ் - சூழ்ந்த ஊறலமர்ந்த பிரான் ஒலியார்கழல் உள்குதுமே

{1-106-1} என்ருற்போல்வன இவ்வகையிலடங்குவன.'

14. இறைவனது திருவருள் நீர்மையினேக்கண்டு வியந்து இவ்வருள் வந்தவாறு மற்றெவ்வணமோ என்று சிந்தைசெய்து போற்றும் முறையில் அமைந் தன. சிலபதிகங்கள்.

எந்தையிசனெம் பெருமான் ஏறமர்கடவுளென்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்ருல் கந்தமாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலேநெல்வாயில் அரத்துறையடிகள்தம்

அருளே (2-90-1} என்ருற்போல்வன இவ்வகையைச் சார்ந்தனவாம்.

15. இறைவனது திருவருள் வண்ணமாகிய திரு நீற்றின் சிறப்பினே விரித்துணர்த்துவது, * மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

{2–66-1] எனவரும் திருநீற்றுப் பதிகமாகும்.

1. திருமுறை 118, 11 82, 110, 11 2, 102 - ஆம் பதிகங்

கள் பார்க்க.