பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/693

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676

பன்னிரு திருமுறை வரலாறு


முன்னேர் கொள்கை யாதல் நன்கு விளங்கும். வேதங் களே நன்ருக ஒதியுணர்ந்தவன் என்ற பொருளில் வேத முதல்வன்’ என நான் முகனேக் குறித்த இளங் கோவடிகள், வேதங்களே யெல்லாம் முதன் முதல் அருளிச் செய்த முனேவன் என்ற கருத்தில் மறைமுது முதல்வன்’ எனச் சிவபெருமானைப் போற்றியுள்ளார். சி வ .ெ ப ரு ம | ன் அருமறைகளே அருளிச் செய்த திறத்தை,

ஆறறி யந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து’ என வரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல் உணர்த்துகின்றது. மதுரை ஆலவாயிற் கோயில் கொண்டருளிய இறைவன் வேதங்களேயும் அவற்றின் பொருள்களேயும் திருவாய் மலர்ந்தருளிய செய்தியை,

'பொங்கழ லுருவன் பூதநாயகன் நால் வேதமும்

பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னெடும் அமர்ந்த ஆலவாயாவது மிதுவே (3-120.1) என வரும் தொடரால் காழிப் பிள்ளேயார் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம்.

தமிழ் நாட்டிற் சங்ககால முதற் கொண்டு வேத வேள்வியினையும் சிவநெறியினையும் போற்றி வளர்ப்பதிற் சிறந்து விளங்கிய வேதியர் குடும்பமாகிய கவுணிய கோத்திரத்தில் தோன்றியவர் திருஞான சம்பந்தராதலின், அவர் திருவாய்மலர்ந்தருளிய திருப் பதிகங்களில் வேத நெறியின் சிறப்பு பல விடங்களிலும் வற்புறுத்தப்பெற்றுளது. வேத நெறியை வைதிகம்’ எனவும் மறை வழக்கம் எனவும் (8-108-2,3), சிவநெறியில் நின்று வழிபடு தற்குறிய பரம்பொருளைச் "சைவன் (1-12-2) எனவும், சைவனுர் (1-109-7) எனவும் ஆளுடைய பிள்ளேயார் வழங்கியுள்ளார்,