பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 685

ஐம்புலப் பேருருவாகிய பரமானுவினை அடிப் படையாகக்கொண்டு அவற்றின் கூட்டத்தால் அணுத் திரளும் அவ்வணுத் திரள்களின் சேர்க் கையால் உலகமும் தோன்றும் என்பர் சமனர். இங்ங்ணம் தொடக்க நிலே பற்றிய ஆரம்பவாதம் பேசுவோர் சமணர்களும் புத் தரில் ஒரு வகையினராகிய வைபாடி கரும் ஆதலின், அன்னேர் ஆரம்பர்’ எனக் குறிக்கப் பட்டனர்.

வேர்வந்துற மாசூர்தர வெயில் நின் றுழல்வாரும் மார்பம்புதை மலிசீவர மறையா வருவாளும் ஆரம்பர் ’ | 1–10–10 என்ருர் ஆளுடைய பிள்ளையாரும்.

காணப்படுகின்ற இவ்வுலகம் பின் காரண நியிேல் அருவமாய் உள்ளதே இப்பொழுது காரிய நிலேயில் உருவமாய் விரிவடைந்துள்ளது என்பது சைவர்களது துணியாகும். புத்தர்களோ உலகம் முற்கணத்தில் தோன்றியது பிற்கணத்தில் இல்லே யாய்க் கணந்தோறும் மாறியழிவதா தலின் எல்லாம் பாழே என்று சூனியவாதம் பேசுவர். இவ்வாறு எல்லாப் பொருள்களும் கணந்தோறும் தோன்றி யழிவனவே என்பது புத்த சமயத்தார் கோட்பாட தலின் அன்னுேர் கணபங்கவாதிகள்’ எனப் பேசப் பட்டனர். இவர்களேக் கணிகை நோன்பர் (3-3-10) எனக் கு றி ப் பி டு வ ர் ஞானசம்பந்தர், குணங் கள், அறிவு. பொருள் என்பன யாவும் கண தோறும் தோன்றுயழிவனவே; ஆதலின் அவை நிலே யுடைய பொருள்களாகக் கொள்ளத்தக்கன அல்ல என்பது இச்சமயத்தாரது கொள்கையாகும். புத்தர் கூறும் இக் கொள்கையினே,

  • குணம் அறிவுகள் நிலேயில பொருளுரை மருவிய

பொருள்களும் இல

தினம் எனுமவர்' (1-21–10) என வரும் தொடரில் ஞான சம்பந்தர் தெளிவாகக் குறித்துள்ளார்.