பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700

பன்னிரு திருமுறை வரலாறு


அல்லலுற்றவர் ஆதலின், இளமையும் யாக்கையும் நிலையா என்பதனே அவர் தமது சொந்த அனுபவத்தி லேயே உணரும் வாய்ப்பைப் பெற்றதில் வியப்பில்லே. நில்லாத உலகியல்பு கண்டு, இனி நிலேயா வாழ்க்கை யில் ஈடுபடுவேன் அல்லேன் என்னும் துணிவுடைய ராய், கொல்லா அறத்தை மேற்கொண்ட அமணர் குழுவிற் சார்ந்து தருமசேன ராகித் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பயனற்ற விரதங்களிலும் நோன்பு களிலும் வீணே கழித்துப் பின் தம் தமக்கையார் செய்த தவத்தின் பயனுக இறைவர் அருள் கூடுதலால் திருவதிகை வீரட்டான த்தை அடைந்து சூலே நோய் நீங்கப்பெற்றுத் திருநாவுக்கரசரானர். இ ங் ங் ன ம் நாவுக்கரசராகி இறைவனது திரு வருள னுபவத்தில் திளே த்த நிலையில் பாடிய திருப்பதிகங்களே, நான்கு, ஐந்து, ஆருந் திருமுறைகளாக அமைந்துள்ளன. இத் திருப்பதிகங்களிற் பல, வாழ்க்கையில் நெடுங் காலம் துயருற்ற நாவரசர், அத்துயர மிகுதியால் இறைவனே நோக்கி முறையிடும் நிலேயில் அமைந் துள்ளன மக்கள் தமது அறியாமையால் பிழை புரிந் தாலும், பின்னர்த் தம்முடைய குற்றம் உணர்ந்து அருளாளகிைய இறைவன் பால் முறையிடுவாராயின் அம்மையப்பணுகிய இறைவன். அன்னேர் அறியாமை யாற் செய்த குற்றங்களைப் பொறுத்து அருள் புரிவன் என்னும் பேருண்மையினே அப்பசடிகள் த ம து வாழ்க்கையில் சிறப்பாக உணர்ந்திருந்தார்.

ஞான சம்பந்தரும், நம்பியா ருரரும் தாம் பாடிய திருப்பதிகங்களின் இறுதிப் பாடல்களில் பாடினே ராகிய தம் பெயரையும் அப்பதிகங்களேக் காதலாகி ஒதுவோர் பெறும் பயனே யும் விரித்துரைத்தமைபோல, அப்பரடிகள் தம் பதிகத்திறுதியில் அவற்றைக் குறிப் பிடும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. தம் வாழ்க்கை