பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742

பன்னிரு திருமுறை வரலாறு


8. அழகார் கொன்றை வாசன் காண்’ (6.65.2) என்றும், தறுங்கொன்றைப் போதின் உள்ளான் என்றும் இறைவனது திருவடையாள மாலேயாகிய கொன்றை மலரை அப்பரடிகள் போற்றியுள்ளார்.

இதனை யடியொற்றி வாசத்தினர் மலர்க் கொன்றையுள்ளார் (7.19-2) எனச் சிவபெருமானே நம்பியாரூரர் போற்றுகின் ருர்.

9. சங்கையொன் றின் றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே . (6-99-2) என்பது திருத்தாண்டகம். அமரர் அடி பரவச் சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்ச முண்டார் (7.19-3) என்பது சுந்தரர் திருப்பாட்டு,

10. கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானே' (4-7-1) எனவும். வஞ்சனேயா ரார்பாடுஞ் சாராத மைந்தனே (4-19-8) எனவும் கூறினர் அப்பரடிகள், * வஞ்சங்கொண்டார் மன ஞ்சேர கில்லார் ? (7-19, 5) என்ருர் நம்பியாரூரர்.

11. “நுந்தாத ஒண்சுடரே " (6-31-4) (6.61.5) எனப் போற்றினர் அப்பரடிகள்.

நுந்தா ஒண்சுடரே நு னே யே நினேந் திருந்தேன் (?-21-1) என்ருர் சுந்தரர்.

12. ஒதுவித்தாய்...............நின் பணி பிழைக்கில் புளியம் வளாாால் மோதுவிப்பாய் உகப்பாய், முனி வாய் ' (4-99-1) என இறைவன் பால் முறையிட்டார் திருநாவுக்கரசர்.

இவ்வாறே ஒழிப்பாய் என்வினையை உகப் பாய் முனிந்தருளித் தெழிப்பாய் மோதுவிப்பாய் விலே ஆவண முடையாய் (7-23-5) என இறைவனே வேண்டிக்கொண்டார் சுந்தரர்.