பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/775

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758

பன்னிரு திருமுறை வரலாறு


திருமுறைகளின் சாரமாக அமைந்த சாத்திரங்க ளாகும். ஆகவே மூவர் அருளிய தேவாரத் திருப் பதிகங்களில் அறிவுறுத்தப்பெறும் பொருட்கூறுகளே யெல்லாம் உலக நூல் வழக்குப்பற்றிய தொல்காப்பியம் முதலிய இயற்றமிழ் நூல்களின் துணைகொண்டும் அறிவனுால் வழக்குப்பற்றிய மெய்கண்ட நூல்களின் துனே கொண்டும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் , இத்திருமுறை நூல்களே விரும்பிக்கற்கும் நல்லறிஞர் களது கடமையாகும்.