பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 773

எவனரும் தொடர்ப் பொருளை அடியொற்றி இறைவ னது திருவடியைப் படிக்கொள் சேவடி (5-36-10) எனப் பரவிப் போற்றிஞர் அப்பர் சுவாமிகள்.

நீரறவறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே ’

என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து.

தொடைத்தலை மலத்திதழி துன்னிய எருக்கலரி

வன்னி முடியின் சடைத்தலை மிலேச்சிய தபோதனன் ? (3–79-5)

என வரும் ஞானசம்பந்தர் தேவாரம், இறைவனது தவ உருவினே இனிது புலப்படுத்தல் காணலாம்.

அப்பிறை, பதினெண் கணமும் ஏத்தவும் படுமே,

என்பது புறப்பாட்டு.

பாரொடும் விண்ணும் மண்னும்

பதினெட்டுக் கணங்கள் ஏத்த" (4-29–8)

என்பது அப்பர் தேவாரம்.

அதியமான் என்னும் வள்ளலது கொடைத்திறத் தினேயும் விருந்தோம்பும் பண்பினேயும் பாராட்டப் போந்த ஒளவையார்,

ஒரு நாட் செல்லலம் இருநாட் செல்லலம் பல நாட் பயின்று பல ரொடு செல்லினும் தலே நாட் போன்ற விருப்பினன் மாதோ’ (புறம் 101

என மகிழ்ந்து பாடியுள்ளார். திருமுல்லேவாயில் என்ற தலத்தில், வாழும் செல்வர்களது விருந்தோம்பும் குணத்தினேயும் எத்தனே நாட்கள் தங்கிலுைம் அடி யார்கள் பால் வைத்த ஆராவிருப்பத்தினுல் செஞ்சாலி