பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 775

என்ற பாடலாகும். எல்லா உலகிற்கும் தலைவனகிய இறைவனது திருவடியை அரணுகக் கொண்டோர், எத்தகைய அச்சமும் இன்றி நீடு வாழ்வார்கள் என்பதனே,

வானந்துளங்கிலென் மண் கம்பமாகில்என் மால்வரையும் தானந்துளங்கித் தலதடுமாறிலென் தண்கடலும் மீனம்படிலென் விரிசுடர் விழிலென் வேலே நஞ்சுண்டு ஊனமொன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

(4-113-3)

எனவும்,

  • எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்

எங்கெழிலென் ஞாயிறு எளியோமல்லோம் : (6-95–2}

எனவும் வரும் திருப்பாடல்களில் திருநாவுக்கரசர் வற்புறுத்திய திறம் இங்குச் சிந்திக்கத்தக்கதாகும்.

வடதிசையில் இறைவன் எழுந்தருளிய இமயம் உள்ளது. அதற்கு ஒப்பத் தென்திசையில் ஆய்குடி என்ற ஊர் இல்லாது போகுமானல் இவ்வுலகம் நிறை ஒவ்வாமையால் பிறழ்ந்துபோகும்; ஆய்குடி இருத் தலால் இத்தகைய பிறழ்ச்சி இலதாயிற்று என ஆய் குடியைச் சிறப்பிக்கும் முகத்தால் அங்கு வாழும் ஆய் வேளினது பெருமைக்கு இமயத்து வாழும் இறைவனது பெருமையை உவமையாக்கிப் புனேந்துரை வகையால் உயர்த்துவது,

வடதிசையதுவே வான்தோய் இமயம்

தென்திசை ஆய்குடி இன்ருயின் பிறழ்வது மன்னே இம்மலர்தலே உேைக’

என வரும் 32-ஆம் புறப்பாடலாகும். உண்மைவகை யான் நோக்கின் வடதிசையில் இறைவன் விரும்பி வீற்றிருக்கும் திருக்கயிலாய மலைக்கு ஒப்பத் தென்