பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780

பன்னிரு திருமுறை வரலாறு


வைத்துக் கூறினர். ஆயினும் தனக்கு முதல்வகை ஆதிபகவனத் தேர்ந்துகொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத் தன்மையும் உலகிற்கு இன்மையால் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் ' என்பதே ஆசிரி யர் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கங் கூறுவர் பரிமேலழகர்.

“ எழுத்தெனப் படுப அகரமுதல் '

学,* (நூன்மரபு.:) எனறு 18,

' மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் ”

(மொழி மரபு-18)

என்றும் வரும் நூற்பாக்களில் ஆசிரியர் தொல்காப்பிய ஞர், எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மையுடைய தாதலேக் குறித்துள்ளார். " அகரம் தனியே நிற்ற லானும் பல மெய்க் கண் நின்று அவ்வம்மெய்கட்கு இசைந்த ஒ ைசக ளே ப் பய்ந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின், ஒன்றேயாயும் பலவே யாயும் நிற்பதோர் தன்மை உடைத்தென்று கோடும் ; இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க் குந் தானேயாய் நிற்குந் தன்மையும் போல ’ எனவும், இறைவன் இயங்குதினேக் கண்ணும் நிலைத் திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந் தாற்போல, அகரமும் உயிர்க் கண் ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாலே நிற்கும் என்பது சான் ருேர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. அகர முதல’ என்னுங் குறளான் அகரமாகிய முதலேயுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனுகிய முதலேயுடைத்து உலகம் என வள்ளுவளுர் உவமை கூறியவாற்ருனும், கண்ணன் எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே" எனக்கூறிய வாற்ருனும், பிற