பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/824

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806

பன்னிரு திருமுறை வரலாறு


செல்லுதல்’ என்பது, செல்லும் வாய் (குறள்-673) என் புழிப்போல, முடிதல் நிறைவேறுதல் எ ன் ற பொருளில் ஆளப்பெற்றதாகும். மழையின்றி வாளுே க் கும் முடியாதெனவே, ஏனே மக்களுக்கு இயலாமை தாணே பெறப்படும்.

இறைவனது திருவருள் நீர்மையை யுணர்ந்து, அவனருளா லே ஜம்புலன்களேயும் வென்று, வேண்டு தல் வேண்டாமை யின்றி வாழும் அறவோர், நீத்தார்’ எனப் போற்றப்பெறுவர். பற்றற்ற பெரியோர்களாய அவர்களது பெருமையினே விரித்துரைப்பது நீத்தார் பெருமை’ என்னும் மூன்ரும் அதிகாரம். திண் ணிய அறிவென்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானே ஐந்தினையும் அவை விரும்பிய புலங்கள் மேற் செல்லாதபடி அடக்கியாளும் பெரியோன், பிறப்பிறப் பின் நீங்கி எல்லா நிலத்திற்கும் மேல கிய வீட்டினே யடைதல் உறுதியாதலின் , அந் நிலத்திற்கு வித்தாவன் என்பது,

உரனென்னுந் தோட்டி யான் ஒரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ”

என வரும் குறளால் உணர்த்தப்பட்டது. இதன் கண் ஐம்புலன்களே அடக்குதற்குச் சாதனமாகிய நல்லறி வினே அங்குசமாக உருவகஞ் செய்ததற்கேற்ப, அவ்வங்கு சத்தால் அடக்கத்தகும் பொறிகள் ஐந்தினே யும் ஐந்து களிறும் என உருவகித்துரைக்காமல் ஒரைந் தும் எனப் பொதுப்படக் கூறினமையால், இச்செய்யுள் ஏகதேச உருவகம் என்பர்.

திருக்கேதாரத்தின் சிறப்பினே உணர்த்தப்போந்த திருஞானசம்பந்தர், அங்கே ஜம்புலனடக்கிய அறவோ ராகிய சிவனடியார்கள், கேதாரப் பெருமானைப் பேரன்புடன் வழிபடுந் திறத்தினே,