பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/840

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822

பன்னிரு திருமுறை வரலாறு


மயக்கத்தின் நீங்கிக் குற்றமற்ற தூய மெய்யுணர் வுடைய ராயினர்க்கு அம்மெய்யுணர்வு உயி ரோ டொற்றித்து நின்ற உள்ளத்திருள் நீங்க ஈறிலாப் பேரின்ப வாழ்வின நல்கும் என்பது,

இருள் நீங்கி யின்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு ’

என்பதனுற்புலம்ை. இருள் நீக்கத்துக்கு இறைவன் திருவருளால் மருள் நீங்கப்பெறும் மாசறு காட்சியே காரணமாம் என்பதனே,

  • மறப்படுமென் சிந்தை மருள் நீக்கினுன் காண் :

வானவரும் அறியாத நெறிதந்தான் காண்

I6-30-5] எனவும்,

இருளாய வுள்ளத்தின் இருளை நீக்கி

இடர்பாவங் கெடுத்தேழையேனே யுய்யத் தெருளாத சிந்தைதசீனத் தெருட்டித் தன் போற்

சிவலோக நெறியறியச் சிந்தைதந்த அருளானே

எனவும்,

  • பொன்னுள்ளத் திரள் புன்சடையின்புறம் மின்னுள்ளத்திரள் வெண்பிறை யாயிறை நின்னுள்ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் என்னுள்ளத்துள தெந்தை பிராணிரே !

எனவும் வரும் அப்பரடிகள் வாய்மொழிகளால் இனி துணரலாம்.

  • திருநாவுக்கரசருடைய இளம் பருவத்தில் அவர்க் குப் பெற்ருேர் இட்ட பெயர் மருணிக்கியார் எனச் சேக்கிழாரடிகள் கூறியதற்கு இத்தொடர் ஆதாரமாதல் காணலாம்.