பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 863

மாய் நிற்கும் இயல்புடையவன் என வும் அவன் நம் மனுேர்க்கு அருள்செய்யும் பொருட்டு மலேமகள் பாக மாக அருள் காரணத்தின் வருவார்” என்றபடி அருளே கிருமேனி ஆக அவ்வப்பொழுது அடியார் விரும்பிய திரு மேனியினைக் கொண்டு தோன்றி அருள் புரிவன் என வும் தேவாரம் கூறும் நின்ற திருத்தாண்டகம் முதலிய பாடல்கள் இறைவனது எல்லாம் ஆகிய நில் மையையும் மண்ணல்லை என்பது முதலிய பாடல்கள் அவன் அல்லய்ை நிற்கும் நிலையையும் உணர்த்துதல் நோக்கத்தக்கது. இறைவன், உருவம், அருவம், அரு வுருவம் என்று சொல்லப்படும் மூன்று கூற்றுள் ஒரு கூற்றினும் படாதவளுப் வேறுபட்டு நிற்கும் இயல் பினன் ஆதலின் அவனே அம் மூன்றனுள் அடக்கி

புரைத்தல் இயலாத செயலாம், ஞானசம்பந்தப் பிள்ளே யாரும்,

'எந்தையார் அவ. எவ்வகையார் கொலோ’ (3-54-3) என்பதல்ை இறைவன் இயல்பு யாவர்க்கும் புலப்படா முறையினே வியந்துரைத்தார்.

மேற்கூறியவாறு தன்மை பிறரால் அறியாத தலே வனே நாம் எவ்வுருவால் வணங்குதல் கூடும் என்பார்க்கு அவன் நீதி உருவாக உலகில் நிலவு கிருன் என்பது உணர்த்துவார்,

'இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல்

அரிது நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்” [3-71–4

எனப் போற்றினர் ஞான சம்பந்தர்.

“பங்கயத்து அயனும்மால் அறிய நீதியே’

என்ருர் திருவாதவூரடிகளும், இறைவன் ஞானமே திரு மேனியாக உடையான் என்பது, வாலறிவன்’ எனும்