பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/889

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 87

இருளற நோக்கமாட்டாக் கொத்தையேன்” (4-69-1) எனத் தம்மேல் வைத்துக் கூறுமாற்ருல் விளக்கியருளி னர். நெல்லிற்கு உமியும் செம்பினிற் களிம்பும் தொன் மையே அப்பொருள்களோடு விரவினமைபோல, உயிர் களும் அநாதியே அறியாமை என்னும் இருள் விரவிய இயல்பின வாய் அவ்விருளால் அடர்க்கப்பட்டு மெய்யறி வாம் கண்ணிழந்து புகலிழந்து நிற்கின்றன என்பதனே யும், அந்நிலைக்கு இரங்கிய இறைவன் ஒன்று மாற்ரு உயிர்களின் பொருட்டுத் தானே எளிவந்து அருள் செய்கின்ருன் என்பதனையும்,

'இருள்தரு துன்பப்படல மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும்

பொருள் தரு கண்ணிழந்து உண்பொருள் நாடிப்

புகலிழந்த குருடரும் தம்மைப்பரவக் கொடு நரகக் குழிநின்று

அருள் தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன்

அடித்தலமே” என இறைவனது திரு வடிப்பெருமை நுவலும் இப்பாட லால் அரசர் அறிவுறுத்தினமை நோக்கத்தக்கது.

உயிர், தன் விழைவு, அறிவு, செயல்களின் நிகழ்ச்சி சிறிதும் இன்றி, தான் மட்டும் இருள் (ஆணவ) மலத்தோடு உடய்ை உளதாம் தனி நிலையும், பின்பு கருவி கரணங்களோடு கூடி அவை ஒருபுடை விளங்கும் கலப்பு நிலையும், பின்பு இருண்மல முதலாங் குற்றம் நீங்கி இறைவனைத் தலைப்பட்டு விழைவு, அறிவு, செயல்கள் எங்குமாய்ப் பரவி விளங்கும் தூய நிலையும் ஆகிய மூன்று நிலைகளே (அவத்தைகளே) உடையது என்பர். இவற்றுள் முதல் நிலே இருண்மலத்தோடு மட்டும் கூடிய நிலை, இதனேக் கேவலம் என்பர். இரண்டாம் நிலை.இறைவனுல் உடல் பொறிகள் கொடுக்கப்பெற்று வாழும் உலகியல் நிலை. இதனைச் சகலம் என்பர். இந்நிலை அறிவு வளர்ச்சிக் கெனவே அமைக்கப்பட்டதென் ப. சகல நிலையில்