பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/890

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவன் உயிரிற் கலந்து நின்று, அதன் விழைவு அறிவு செயல்களே விளக்கி நன்று தீது என்பனவற் நைக் காட்டும் உதவியையும், உயிரைச் செலுத்திக் கொண்டு சென்று பொருளிற் கலந்து நின்று காணும் உதவியையும் செய்யும் இயல்பினன் என்பது சைவ சமயத்தின் சிறந்த கொள்கையாம். இதனே,

‘அறிவானுந் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றன் தானே (அற்புதத்திருவந்தாதி!

என்னும் அம்மையார் அருள் மொழியால் நன்கு அறிய லாம். இறைவன் காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல் உயிர்களோடு கலந்து நின்று காட்டிக் காணும் இயல்பினன் என்பதனைத் திருநாவுக்கரசர்,

'உண்ணிலாப் புகுந்து நின்றங்கு உணர்வினுக்கு

உணரக்கூறி 4-25-1) "உள்ளத்தின் உள்ளிருந்தங்கு உறுதி காட்டி’ [4-5-6} 'நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை {5–93–8] 'தெள்ளியேனுகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்

உள்குவா ருள்கிற் றெல்லாம் உடனிருந்து அறிதி என்று

வெள்கினேன் வெள்.கி.நானும் விலாவிறச் சிரித்திட்டேனே'

£4–75-3.j

என வரும் தொடர்களால் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். 'உள்குவார் உள்கிற்று எல்லாம் 22س---- ளிைருந்து அறிதி” என்பதல்ை இறைவனது கானும் உபகாரத்தைத் தம் அனுபவ வாயிலாகக் கண்டுரைத் தமை நினைவிற் பதிக்கற்பாலது.

மும்மலமும் நீங்கப்பெற்று விரிந்திடும் அறிவு விளக்கத்தால் இறைவனோடு இரண்டறக் கலத்தல் உயிரின் தூய நிலையாகும். இதனைச் சுத்தம் என வழங்குவர். இந்நிலயை அடைவதற்கே சமயங்க ளெல்லாம் இறைவனுல் படிகால் முறையாக அமைக்கப் பட்டன என்பர். இந்நுட்பம்,