பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/899

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 831

தொடங்கும் திருமழபாடித் திருத்தாண்டகத்து "இழிப் பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துனேயே’ என்ற தொடரில் குறித்துள்ளார். இத்தொடரில் முறையே பசுத்துவம் எனப்படும் ஆணவமலத்தினேயும் பாசம் எனப்படும் கன்ம மலத்தினேயும் குறிப்பிட்டதோடு அமையாது, மாயையின் தொடர் பாகிய பிறவியினையுஞ் சேர்த்துரைத் தமையும், பசு, பாசம், பிறப்பு என்னும் இம் மும்மலங்களையும் நீக்குவோணுகிய முதல்வன் உயிர் கட்கு உயிர்த்த 'ணயாய் நின்று அருள் செய்கின்ருன் என்பதனையும் ஒருங்கே குறித்துள்ளமை காணலாம். இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து நோக்கினல் இதனைப் பாடிய திருநாவுக்கரசர் ஆணவம் கன்மம் மாயை என மும் மலம் உண்டு என்னும் கொள் கையினராதல் நன்கு விளங்கும். ஈண்டுப் பிறப்பு என்றது மாயா காரியத்தைக் குறித்து நின்றது. மலந்தாங்கிய பாசப்பிறப்பறுப்பீர்” (7-82-6) என்ருர் சுந்தரரும்

மேல் தேவார ஆசிரியர்கள் கருத்தாக உடன்பட்ட மும்மலங்களுள் மூலமாய் முதலதாய ஆணவமலம், வேறு பல தேவாரப் பாடல்களிலும் குறிக்கப்படுதல் நோக்கத்தக்கது. மலம் என்னும் பெயர் மும்மலங் களுக்கும் பொருந்துமாயினும், அச்சொல், அடைமொழி யின்றி ஆணவமலம் ஒன்றனேயே சிறப்பாக உணர்த்து தல் தேவார ஆசிரியர்கள் காலத்துச் சொல்வழக் கெனத் தெரிகிறது.*ஆணவமலம் உயிரோடு ஒற்றித்து நின்று அறிவுடையுயிர்களே அறியாமைப்பாற்படுத்து ம ைற ப் ப த க லி ன், அது காரணமாக இருள்' என்ற பெயரால் தேவாரப் ப தி க ங் க ளி ற் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இருளெனப்படும் ஆணவமலம் இறைவனது அருளாலேயே போக்குதற் குரியது என்பதனே,

  • மலனெடு மாசும் இல்லவர் l-42-2,