பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/909

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற திருத்தலங்கள் 891

சங்க காலச் சோழ மன்னர்களுள் செங்களுன் ஒருவேைலயே எழுபது மாடக்கோயில்கள் கட்டப் பெற்றன என்ருல், அவ் வேந்தர் பெருமானுக்கு முன் னும் பின்னும் ஆட்சி புரிந்த முடி மன்னர்களாலும் குறு நில மன்னர் முதலியவர்களாலும் சிறியனவும் பெரி யனவுமாக எத்தனையோ திருக்கோயில்கள் தமிழகத் தில் கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படும். எனவே கடைச்சங்க காலத்திற்குப் பின் ஐந்து நூற்றண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய தேவார ஆசிரியர்களாற் பாடிப் போற்றப்பெற்ற சிவத்தலங் களுட் பெரும் பாலன, அவ்வாசிரியர்கள் வாழ்ந்த காலப்பகுதியாகிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முன்னரே தமிழகத்தில் நிலைபெற்றிருந்த பழங்கோயில் களாதல் வேண்டும். இவற்றுட் பல, தமிழ் வேந்தரல் லாத களப்பிரர் முதலியோரது படையெடுப்பாலும், சமணம் புத்தம் முதலிய சமயங்களே மேற்கொண்டோ ரது தாக்குதலாலும் இடைக்காலத்தே சிதைந்து மறைந்து, பின் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்த ரும் தமிழ்நாடெங்கும் சென்று செய்த திருநெறித் தமிழ்த்தொண்டினுல் சிதைவு நீங்கி, மீண்டும் தம் பழைய நிலையை யெய்திச் சிறப்புற்றன என்பது தேவார ஆசிரியர்கள் வரலாற்ருல் விளங்கும்

சிவபெருமான் எழுந்தருளிய பழையாறை வடதளி யில் அமைந்த மாடக்கோயிலைச் சமணர்கள் மறைத்துத் தங்களுக்குரிய சமண்பள்ளியாக மாற்றிவிட்டார்கள். இதனேயுணர்ந்த திருநாவுக்கரசர், வ ட த ளி யி ற் கோயில்கொண்ட பெருமான நினைந்து சமண்பள்ளி யாகிய அவ்விடத்திலேயே உண்ணு நோன்பு மேற் கொண்டு தங்கி விட்டார். இச்செய்தியினே யறிந்த சோழ மன்னன், சமணர்கள் சூழ்ச்சியால் இடையிலே தோன்றிய பள்ளியை நீக்கிப் பண்டுபோற் சிவன் கோயிலாக்கினன் என்ற வரலாறு இங்கு நினே க்க த் தக்கதாகும்.