பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/914

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896

பன்னிரு திருமுறை வரலாறு


பட்டினம், வாயில் மூதலிய பெயர்களாலும், குறிஞ்சியும் முல்லேயும் திரிந்த பாலே நிலத் தலங்கள் சுரம் என்ற பெயராலும் தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற். றுள்ளன. நெய்தல் நிலத்திற்கு உரிய பாக்கம்’ என்ற பெயரும், மருத நிலத்திற்குரிய ஊர்” என்ற பெயரும், முல்லே நிலத்திற்குரிய காடு, வனம் என்ற பெயர்களும் ஏ னே நி ைத் தலங்களுக்கும் வழங்கப்பட்டிருத்தல் அறியத்தக்கதாகும். கா., பொழில், குளம் என்ற பெயர் கள் முல்லே நிலத் தலங்களுக்கும் மருத நிலத்தலங் களுக்கும் ஒப்ப ஆளப்பெற்றன. களம் என்ற பெயர் நானிலத்தலங்களுக்கும் உரிய நிலையில் வழங்கப் பெற்றது. உப்பங்கழிகளுடன் கூடிய நெய்தல் நிலத் தல ம் கழிப்பாலே எனப் பெயர் பெற்றது. பாலேத்துறை என்ற பெயரில் அமைந்துள்ள பாலே என்ற சொல் ஒருவகை மரத்தைக் குறித்த பெயர். திருக்க ளர்’ என்ற பெயர் அத்தலத்தின் மண்ணின் இயல்பு குறித்து வழங்கியதெனக் கொள்ளுதல் பொருந்தும். நிலம், பழனம் (மங்கலம் என்பதன் மரூஉவாகிய) மங்கை, (இடம் என்ற பொருளேத் தரும் வட சொல்லாகிய) தானம், (குடியிருப்பு என்ற பொரு ளுடைய) குடி, (புனற் பரப்பின் நடுவே யமைந்த திட்டு எனப்பொருள்படும்) திட்டை, (இன்னின்னர் இறைவனே வழிபாடு செய்து ஈசன் அருள் பெற்ற திருக்கோயில் என்ற .ெ ப ரு வளி ல் வ ழ ங் கு ம்.) ஈச்சரம், (பு ன ல் ந டு .ே வ பொலிந்து தோன் றும் ஆற்றிடைக்குறை என்ற பொருளுடைய) துருத்தி என்பன தலங்களின் ஈற்றுப் பெயர்களாக இணைத்து வழங்கப்பெற்றுள்ளன. கடல், ஆறு முதலிய நீர் நிலகளே நோக்கியோ அன்றி மலே முதலியவற்றின் நெறிகளே நோக்கியோ எதிர்முகமாக அமைந்த தலங்கள் வாயில் என வழங்கப்பெறுவன. நதி முதலியன கூடும் இடம் கூடல்' என வழங்கப்பெற்றது.