பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/918

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900

பன்னிரு திருமுறை வரலாறு


அவற்றின் அருகேயுள்ள ஆறு முதலியவற்றின் எல்லே பற்றியும், அங்குள்ள தாவர அமைப்பு, வழிபட்டோர், அத்தலத்தின் பெருமை, பரப்பு முதலியவற்றைக் குறித்த அடைமொழிகளுடன் சேர்த்து அவை இன்ன தலங்கள் எனத் தெளிவாக அறிந்துகொள்ளும் முறை யில் தேவார ஆசிரியர்கள் திருத்தலங்களைப் பாடிப் போற்றியுள்ளார்கள். மேலேத் திருக்காட்டுப்பள்ளி, கீழைத்திருக்காட்டுப்பள்ளி, தென் திருமுல்லைவாயில், வடதிருமுல்லே வாயில் என்பன திசை பற்றியமைந்த தலப் பெயர்கள். வடகுரங்காடுதுறை, தென் குரங்காடு துறை என்பன காவிரியாற்றின் வடகரை தென்கரை யாகிய எல்லைபற்றியும் அத்தலங்களில் முறையே வாலி யும் சுக்கிரீவனும் வழிபாடு செய்தனர் என்னும் புராண வரலாறு பற்றியும் பெயரெய்தின. பெரும்பற்றப் புலியூர், திருப்பாதிரிபுலியூர், திருப்பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர் என்பன வியாக்கிரபாதராகிய புலிக்கால் முனிவர் முதலாக அத்தலங்களில் வழிபாடு புரிந்தோர் தொடர்பாலும் அத்தலங்களுக்கும் புலிக் கும் உள்ள தொடர்பாலும் அமைந்த பெயர்கள். நல்லூர், வெண்ணெய் நல்லூர், அறையணி நல்லூர், சேய்ஞலூர், பந்தண்ே நல்லூர், கலய நல்லூர், ஏமநல் லூர், பொய்கைநல்லூர் என்பன நல்லூர் என்னும் பெயரால் வழங்கும் தலங்களிடையே வேற்றுமை தெரிய அடைமொழி பெற்று வழங்குவன. புள்ளிருக்கு வேளுர் , கீழ்வேளுர், பெருவேளுர் என்பனவும் இவ்வாறு அடைமொழிபெற்று வழங்குவனவே.

தலேயாலங்காடு, தலேச்சங்காடு எனவும், இடை மருது, இடைச்சுரம், இடையாறு, இடைக்குளம் 6 ன வும, கடைமுடி என வும வழங்கும் தலங்கள முறையே தலை, இடை, கடை என்னும் அடைமொழி பெற்றன.

நிழலமைந்த சோலைகளும் அடர்ந்தகாடுகளும், இனிய பொழில்களும் ஆக அமைந்த தலங்கள் 'கா'