பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/999

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

எண்டெளமெண்டிலிருந்து வரும் பாக்கித் தொகையை யும், வட்டியையும், புத்தகங்கள் விற்ற வருமானங்களே யும், புத்தக வெளியீடுகளுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

6. இதனுடன் சேர்த்திருக்கிற அட்டவணையிற் கண்ட புத்தகத் தொகுதிகளின் வரிசைக்கிரமம் எவ் விதமிருந்த போதிலும், அந்தந்தக் காலங்களில் தேவைக்குத் தகுந்தபடி எந்தத் தொகுதி எவ்வளவு வேண்டுமானுலும், எவ்வளவு பதிப்புக்கள் வேண்டு மாலுைம் அச்சிட ஸின்டிகேட் தீர்மானிக்கலாம். தனிப்பட்டவர்களாவது அல்லது ஒரு கூட்டத்தாராவது இந்த அட்டவணையிற் கண்ட தொகுதிகளில் எந்தத் தொகுதிப் புத்தகங்களை விரும்பினாலும், விலைக்கு ஐந் நூறு (500) காப்பிகளுக்குக் குறையாதபடி எடுத்துக் கொள்வதாகவும், அதற்கு முன்பணம் கொடுப்பதாகவு மிருந்தால், பொருள் நிலே இடம் கொடுக்கும் பட்சத் தில், முதல் பதிப்பாயிருந்தாலும் அதற்கு மேற்பட்ட பதிப்புக்களாயிருந்தாலும் அந்தத் தொகுதியை முன்ன தாக அச்சிட ஸின்டிகேட் தீர்மானிக்கலாம்.

7. அதன் பிறகு இதனுடன் சேர்த்திருக்கிற அட்டவணை யிற் கண்ட புத்தகங்களின் தொகுதிகள் இருபத்தேழும் (27) அச்சிட்டுக் காப்பிகள் செலவழிந்த பின் மேற்படி அட்டவணையிற் கண்ட புத்தகங்களில் இன்றியமையாதவைகளே அவைகளின் த கு தி க் கேற்றபடி அரும்பதவுரை முதலிய உரைகளுடன் மேற் கண்ட விவரங்களின்படியே வெளியிட வேண்டும். பின்பு இந்த அட்டவணேயிற் கண்டிராத வேறு எந்தத் தகுதியுள்ள தமிழ்ப் புத்தகங்களின் மூலங்களேயும்மூல உரைகளையும், வசனங்களேயும், மேற்படி அட்ட வணையிற் கண்ட புத்தகங்களே அச்சிடுவதற்கும்,