பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1000

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲸$4 பன்னிரு திருமுறை வாலனது:

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர்

நடு நாட்டிலே திருவெருக்கத்தம்புலியூரிலே யாழின் வழியே இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்திற் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் சிவபெரு மானுடைய திருப்புகழை யாழிலிட்டு இசைப்பவசாகி ஏழி சையில் வல்ல தம் மனைவியார் மதங்க சூளா மணியாருடன் சோழ நாட்டிலுள்ள திருத்தலங்களையிறைஞ்சிப் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையையடைந்து திருவால வாய்த் திருக்கோயில் வாயிலின் முன் நின்று இறைவரது பொருள்சேர் புகழ்த்திறங்களை யாழிலிட்டு இசைத்துப் போற்றினர். அவ்வின்னிசையைக் கேட்டு மகிழ்ந்த ஆல வாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்க்கெல்லாம் கன வில் தோன்றித் திருநீலகண்டப்பெரும்பாணரைத் தமது திருமுன்பு கொண்டு புகும்படி பணித்தருளினர். அவ் வாறே பாணஞர்க்கும் உணர்த்தியருளிஞர். இறைவன் பணித்த வண்ணம் திருநீலகண்டப்பாணர் திருவாலவாய்த் திருக்கோயிலுள் இறைவன் திருமுன்பு புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினுர், தரையினிற் சீதம் தாக்கில் சந்தயாழ் நரம்பு தளர்ந்து நெகிழும் என்று பாணர்க்குப் பலகையிடும்படி இறைவர் அசரீரி வாக்கிளுல் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணர்க்குப் பொற்பலகை இட்டார்கள். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப்போற்றினர்.

ஆலவாயிறைவரைப் போற்றி யருள்பெற்ற பெரும் பாணர் பல தலங்களையும் வழிபட்டுத் திருவாரூரை யனேந்து தமது குலமரபின்படி கோயில் வாயிலின் முன் நின்று இறைவர் புகழ்த்திறங்களை யாழிலிட்டு இசைத்தார். பாணரது இன்னிசைக்கு உவந்த ஆருரண்ணலார், பாணர் உட்சென்று வழிபடுவதற்காக வடதிசையில் வேருெரு வாயில் வகுத்தருளினர். பெரும் பாணர் அவ்வாயிலின் வழியே புகுந்து ஆரூர்த்திருமூலட்டானத்து அமர்ந்த இறைவர்முன் சென்று வணங்கி மகிழ்ந்தார். பின்பு பல தலங்களையும் பணிந்து போந்து ஆளுடைய பிள்ளே யாரை வணங்கும் விருப்புடன் காழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருநீலகண்டப் பெரும்