பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1006

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

990

பன்னிரு திருமுறை வரலாறு


திருத்தொண்டர் குலம்

சிவபெருமான் திருவடிகளை வழிபட்டு உய்யும் நற்பேறுடைய அருளாளராகிய சிவனடியார்களிடையே குலம்பற்றிய உயர்வுதாழ்வுக்கு இடமில்லை. அவர்கள் எல்லோரும் தாம்பிறந்த பண்டைக்குலத்தின் தொடர்பினை யறுத்து இறைவனுக்குத் தொண்டுபட்ட திருக்குலமாகிய தொண்டக்குலத்தினர் ஆவர். அறுபத்து மூவராகிய நாயன்மார்களில் அந்தணர் முதல் புலையர் ஈருகவுள்ள எல்லாக்குலத்தவரும் உள்ளார்கள்.

ஆதிசைவ அந்தணர் கால்வர்: புகழ்த்துணை நாயனுர், சடையனுர், இசை ஞானியார், நம்பியாரூரர்.

வேதியர் பன்னிருவர் : குங்குலியக்கலயர், முருகனுர், உருத்திரபசுபதியார், சண்டேசுரநாயனுர், அப்பூதியடிகள், திருநீலநக்கர், நமிநந்தியடிகள், திருஞான சம்பந்தர், சோமாசிமாறர், சிறப்புலி நாயஞர், கனநாத நாயனுர், பூசலார் நாயனுர்.

மாமாத்திரர் ஒருவர் : சிறுத்தொண்ட நாயனுர்.

முடிவேந்தர் அறுவர் : சோமான் பெருமாள், புகழ்ச் சோழர், நெடுமாறர், இடங்கழியார், மங்கையர்க்கரசியார், கோச்செங்கட்சோழர்.

குறுகிலமன்னர் ஐவர் : மெய்ப்பொருள் நாயனுர், கூற்றுவநாயனுர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்க நாயஞர்.

வணிகர் ஐவர் : இயற்பகை நாயனுர், அமர்நீதி நாயனுர், மூர்த்திநாயனுர், காரைக்காலம்மையார், கலிக் கம்பநாயனுர்,

வேளாளர் பதின்மூவர் : இளையான்குடி மாறனுர், விறன்மிண்டர், மானக்கஞ்சாறர், அரிவாட்டாயர், திருநாவுக்கரசர், ஏயர்கோன்கலிக்காமர், மூர்க்க நாயனுர், சாக்கிய நாயனர், சத்தி நாயனுர், வாயிலார் நாயனுர், முனையடுவார் நாயனர், செருத்துணை நாயனுர், கோட்புலி நாயனுர்.

இடையர் இருவர்: திருமூல நாயனர், ஆயை நாயனுர்.