பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1010

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

994

பன்னிரு திருமுறை வரலாறு


என ஞானசம்பந்தப் பிள்ளையார் சிறுத்தொண்டரது போர் வன்மையைப் பாராட்டுதலால் இனிது விளங்கும்.

சேரமான்பெருமாள் சுந்தரரைச் சந்தித்து அவருடன் பலதலங்களையும் பணிந்து பாண்டி நாட்டிற் பரங்குன்ற மேய பரமனைப் பணிந்த செய்தி,

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே என நம்பியாரூரர் அவ்வூர்த் திருப்பதிகத் திருக்கடைக் காப்பிற் குறிப்பிடுதலால் உணரப்படும்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனர் தாம் க்ஷேத்திரத் திருவெண்பாவை அருளிச் செய்தற்குமுன் பல்லவ வேந்த ராயிருந்து அரசுபுரிந்த செய்தி அவரைக் காடவர்கோன்' என நம்பியாரூரர் குறித்த அடைமொழியால் உய்த்துணரப் படும்.

காடவர்கோன் கழற்சிங்கன் வடபுல வேந்தரைப் போரில் வென்றமை, கடல் சூழ்ந்த உலகெலாங் காக் கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் என அவ் வேந்தர்பெருமானது உலகங் காத்தல் வன்மையை நம்பியாரூரர் சிறப்பித்துரைத்தலால் நன்குணரப்படும்.

கோட்புலியார் சோழ மன்னனுக்குப் படைத் தலைவ ராய்ப் போர் மேற்கொண்டு சென்று வென்றமை,

  • கூடாமன்னரைக் கூட்டத்துவென்ற கொடிறன் கோட்புலி

சென் னி நாடார் தொல்புகழ் நாட்டியத்தான்குடி’ (?-15-10) என நம்பியாரூரரும்,

' குற்ற மறுக்குநங் கோட்புலி’

என நம்பியாண்டார் நம்பியும் கூறுதலால் புலனும்.

காஞ்சியிற் கற்றளிகட்டிய காடவர் கோனுக்கு இறைவன் கனவில் தோன்றி அருள் புரிந்தமை காஞ்சிக் கயிலாச நாதர் கோயிற் கல்வெட்டுக் குறிப்புக்களால் உய்த்துணரப்படும்.

மேற்கு றித்த இச்செய்திகள் திருத்தொண்டத் தொகையிலும் திருவந்தாதியிலும் குறிப்பாக உணர்த்தப் பெற்று நாட்டில் வெளிப்பட வழங்கிய பழஞ் செய்தி