பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1015

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 999

"புல்லன வாகா வகையுலகத்துப் புணர்ந்தனவும்

சொல்லினவும் நய மாக்கிச் சுடர் பொற் குவடு தனி வில்லனை வாழ்த்தி விளங்குங்கயிலைபுக் கானென்பராற் கல்லன மாமதிற் சூழ்கட ஆரினிற் காரியையே "

எனவரும் திருவந்தாதியிற் குறிக்கப்பட்ட குறிப்பினை ஆதரவாகக் கொண்டே, காரியார் மூவேந்தர்பாற் கோவை பாடி நயவுரை பகர்ந்து சிவப்பணி புரிந்தார் என்ற செய் தியைச் சேக்கிழாரடிகள் தெளிவுபடுத்தியுள்ளார். இப் பாடலில்,

புல்லன ஆகாவகை உலகத்துப் புணர்ந்தனவும் சொல்லினவும் நயமாக்கி" என்ற தொடரை உளத்துட்கொண்டு,

" வண்டமிழின், துறையான பயன் தெரிந்து..தமிழ்க் கோவை தம்பெயராற் குலவும்வகை, முறையாலே தொகுத்தமைத்து" எனவும், சொல்லினவும் நயமாக்கி ' என நம்பி கூறிய தனை யுளங்கொண்டு,

அடுத்த உசை நயமாக்கி" "யாவர்க்கும் மனமுவக்கும் இன்பமொழிப் பயனியம்பி " எனவும்,

சுடர் பொற்குவடு தனி வில்லளை வாழ்த்தி என வரும் அந்தாதித் தொடரை மனங்கொண்டு

" மன்னவர்பாற்பெற்ற நிதிக்குவை கொண்டு......

சங்கரளுர் இனிதமருந் தானங்கள் பல சமைத்தார் ” எனவும், விளங்குங் கயிலைபுக்கான் ’ என்னும் நம்பி கூற்றினை அடியொற்றி,

" வாய்ந்த மனம்போ லுடம்பும் வடகயிலைமலை சேர்ந்தார் " எனவும் அருண்மொழித் தேவர் காரி நாயனர் வரலாற்றை விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

6. தஞ்சை மன்னவளும் செருத்துணை எனத் திருத் தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற செருத்துணை நாயனர் தோன்றிய திருப்பதியாகிய தஞ்சை என்றது, பிற்காலச் சோழமன்னர்க்குத் தலைநகராயமைந்த வெண் ணிநாட்டுத் தஞ்சையை அன்றெனவும், செருத் துணை நாயர்ை பிறந்த தஞ்சை சோழநாட்டின் அகநாடு