பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1033

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் #01?

வெண்பிறை உவமையாம் என்பது, அவ் வான் இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற்று............... அந்தணன் (அகம்-கடவுள் வாழ்த்து) எனவரும் பெருந் தேவர்ைபாடலால் அறியப்படும். திண்ணஞரது வேட்டைக் கோலத்தைப் புனைந்துரைக்கும் ஆசிரியர், திண்ணணுர் மார்பில் அணியப்பெற்றுள்ள பன்றிக்கொம்பு வெள்ளிய பிறைச் சந்திரனையொத்து விளங்கிய தோற்றத்தினை,

ஏனக்கோடு, துண்டப்பிறைபோல்வன துரங்கிட பெரிய. கண்ணப்பர்-59 எனக்குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

அரசர்க்குப் படைவலி சிறந்திருப்பினும் அவரது வெற்றி அறத்தையே முதலாகவுடையது என்பதனை,

கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன் மறவரும் என நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் ' (புறம் 53; என்பர் மதுரை மருதன் இளநாகனர். அரசியல் ஆட்சிக்கு அறநெறியே அடிப்படையாமைதல் வேண்டும் என்னும் இக்கருத்தி ையொட்டி அரசியல் நெறியாற் காக்கத்தக்கது அறநெறியே என்னும் உண்மையினையும்

அரசியல் தெறியின் வந்த அறநெறி வழாமற் காத்து வரை நெடுந் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி உரைதிறம் பாத நீதி ஓங்கு நீர்மையினில் மிக்கார் திரை செய் நீர்ச் சடையான் அன்பர் வேடமே சிந்தை

செய்வாள் (பெரிய - மெய்ப் - கி;

எனவரும் செய்யுளில் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு நாடு எல்லாவன க்களும் பெற்றிருப்பினும் குடிமக்கள் பால் அருளுடன் ஆட்சிபுரியத் தக்க தலைவனுகிய வேந்தனைப் பெருதாயின் அவ்வளங்களாற் சிறிதும் பயனுடையதன்று என்பது,

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியாற் புலனும்,

இவ்வுலகில் வாழ்வார்க்கு உயிர்வாழ்க்கைக்கு இன்றியமை யாதன நெல் முதலிய உணவுப் பொருள்களும் நீரும்