பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1079

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密

தங்களுக் கேற்ற பண்பில் தகும்பணி தலைநின் றுய்த்தே

அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டுசெய்வார் எனச் சேக்கிழாாடிகள் குறித்த முறையில் கூத்தப் பெருமான் திருக்கோயிலில் அணுக்கத் தொண்டினுக்கு உரியராய் விளங்கும் தில்லைவாழந்தணர்களாகிய திருக் கூட்டத்தினைக் குறித்தமைந்த இச்சிற்பத்தில், ஆயிர வர்க்கு ஒருவர் என்ற கருத்தில் மூவாயிரவரையும் குறிக்க அந்தணர் மூவர் இடம்பெற்றுள்ளமை காணலாம். இவ்வாறே திருப்பனந்தாள் திருக்கோயிலில் உள்ள திருத் தொண்டத் தொகைச் சிற்ப வரிசையிலும் தில்லைவாழந் தனரைக் குறிக்கும் கருத்தில் அந்தணர் மூவர் அமர்ந் துள்ளமை ஒப்புநோக்குதற் குரியதாகும்.

2. திருநீலகண்ட நாயனுர் :

திருநீலகண்டக் குயவரும் அவர் தம் மனைவியாரும் கோலைப் பிடித்துக்கொண்டு திருப்புலிச்சரத் திருக் கோயிலின் முன்னுள்ள திருக்குளத்தில் மூழ்கியெழும் நிலையில் அமைந்தது இச்சிற்பமாகும்.

3. இயற்பகை நாயனர் :

வலமிருந்து இடம் : துார்த்த வேடத்துடன் தம் இல்லத்திற்கு எழுந்தருளிய சிவனடியாரை இயற்பகையார் இருகைகளையும் குவித்து வரவேற்றல். 'எந்தை எம் பிரான் அடியவர் அனைத்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால், சிந்தை அன்பொடு சென்றெதிர் வணங்கி...... முந்தை என்பெருந் தவத்தினுலன்ருே முனிவர் இங்கெழுந்தருளியது ” என்ருர் ” (பெரிய - இயற் - 5). இடமிருந்து வலம் : இயற்பகையார் தம் மனைவியாரை அடியார்க்கு அளித்தலும் அவர் ஏற்றுக் கொள்ளுதலும். நடுவே நிற்பவர் இயற்பகையார் மனைவியார். இயற்பகையார் திருவுருவத்தில் குடுமி வலப் பக்கத்திலும், தூர்த்த வேடத்தினராகிய அடியார் திருவுருவத்தில் குடுமி இடப் பக்கத்திலும் அவ்விரு வரையும் வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களாகத் திகழ்தல் காண்க.

(3) A. இறைவன் அம்மையப்பராய் விடைமீது தோன்றி இயற்பகையார்க்கு அருள்புரிதல்.