பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பன்னிரு திருமுறை வரலாறு


எனப் பட்டினத்தடிகள் வியந்து பாராட்டியுள்ளார். இதன் கண் வரகுண பாண்டியன் செய்தனவாகப் பட்டினத்தடிகள் கூறிய செய்திகளைப் பெரும்பற்றப்புலியூர் நம்பி தாம் பாடிய திருவிளையாடற் புராணத்தில் வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலிற் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வரகுண பாண்டியன், உடல் முழுதும் திரு நீறணிந்து பகைவருடன் பேசர் செய்து நின்ற காலத்து, இவன்மேல் பகைவர் குறிபார்த்து எய்த அம்பு, இவனது திருநீறு பூசிய மேனியிற் படாது ஆற்றல் குன்றி இவனது பாதத்தில் வந்து வீழ்ந்ததென்றும், அதனே க்கண்டு வியந்த இவ்வேந்தன், திருநீறணியும் தகுதிபெருத எனது பாதத் தில் அம்பு தைத்தது பொருத்தமுடையதே என்று

சொல்லித் தான் அணிந்த சிவசாதனமாகிய திருநீற்றின் பெருமையை எல்லோர்க்கும் விளங்க எடுத்துரைத்

ଛା!

தானென்றும் தெரிகிறது. இச்செய்தியினை,

  • பொடியேர் தருமேனியணுகிப் பூசல் புகவடிக்கே

கடிசேர் கனை குளிப்பக்கண்டு கோயிற் கருவியில்லா அடியே பட வமையுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே " எனவரும் பாடலால் நம்பியாண்டார் நம்பி வியந்து போற்றி யுள்ளார்.

பாண்டியர் குடியில் வரகுணன் என்ற பெயருடைய

வேந்தர் இருவர் இருந்தனரென்பது கல்வெட்டுக்களாலும்

- **

--

செப்பேடுகளாலும் இனிது புலனுகின்றது. அவ்விருவருள்

முன்னுேணுகிய வரகுணன் என்பான் கி. பி. 192 முதல் 835 வரை ஆட்சிபுரிந்தவன். இரண்டாமவன் இம்முதல் வரகுணனது பேரவைன், கி. பி. 882 முதல் 580 வை

( E ثم ثنائية பரகுவன. : تاتينية تك تية م نمو 苓 女 பாண்டி நாட்டை ஆண்டவன் இ வரகுணனுவன். இவ்விருவருள் மாணிக் * தினுெராத் திருமுறை யாசிரியர்களாகிய பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பி என்பவர்களாலும் போற்றப்பெற்ற சிவபத்திச் செல்வம்

  • * * A : க்

வாய்ந்த வரகுணன் யாவன் என்பதே இங்கு ஆராயத்தக்க செய்தியாகும்.

  • {3} :
  • கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 62-ஆம் செய்யுள். இப் பாடலில் கோயிற்கருவி யென்றது சிவசாதனமாகிய திருநீற்றை யெனக்கொள்க,