பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பன்னிரு திருமுறை வரலாறு


சின்னமனூர் என வழங்குவர். அரிகேசரி யென்ற சிறப்புப் பெயருடைய நின்றசீர் நெடுமாறன் பெயராலமைந்த திருத் தலத்தைத் திருவாதவூரடிகள் குறிப்பிடுதலால் மாறவர்மன் அரிகேசரியாகிய நின்ற சீர் நெடுமாறனுக்கும் அவனை நல் வழிப்படுத்திய திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கும் காலத் தார் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது ஒரு தலே.

தேவாரத் திருமுறைகளில் வழங்கப்பெருத அஞ்ஞா னம், இருதயம், இந்தீவரம், சந்தீவரம் சிந்த குலம், சூக்கம், து.ாலம், தோயம், துவந்துவம் நந்தீவசம், பயங்கரம், பயோ தரம் முதலிய வடமொழிச் சொற்களும், அச்சன் , அச்சோ. அந்தோ, அதெந்துவே என்பன போன்ற திசைச் சொற் களும், குது குதுப்பு, விது விதுப்பு. கூவித், துவேன் சட்டோ, தகப்பன், துரை, எத்தன் என்பன போன்ற பி. ற் காலச் சொற்களும் திருவாதவூரடிகள் திருப்பாடல்களிற் காணப்படுகின்றன,

$

" . . . rت- ک#! , . . .

கோகழி, கல்லாடம், வேலம்புத்துார். சாந்தம்புத்து உத்தரகோசமங்கை, பூவலம், பட்டமங்கை அரிகேசரி, ஓரியூர், பாண்டுர், கவைத்தலே, குவைப்பதி முதலாகத் திருவாசகத்திற் குறிக்கப்படும் ஊர்களும் சில தல புராண வரலாறுகளும் தேவாரத் திருமுறைகளிற் காணப்படவில்லை. தேவார காலத்திற் காணப்படாத தசாங்கம் முதலிய பிரபந்த வகைகளும் அவை பற்றித் தோன்றிய புதிய யாப்பு விகற்பங் களிற் சிலவும் திருவாசகத்தில் உள்ளன. திருவாசகத்தித் கூறப்பட்ட பஞ்சமலம், வினேயொப்பு முதலிய தத்துவ விளக்கங்கள் சில தேவார ஆசிரியர் காலத்திற்குப் பின்

^

தோன்றியவை யெனத் தெரிகிறது

+

இதுகாறும் இங்கு எடுத்துக்காட்டிய எதுக்களால் மாணிக்கவாசக சுவாமிகள் தேவார ஆசிரியர்கள் மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவரென்னுங் கொள்கையே எற்றுக் கொள்ளத்தகுவதென்பதும், அடிகள் வாழ்ந்த காலம் கி. பி. 792 முதல் 835 வரை ஆட்சிபுரிந்த முதல் வரகுண பாண்டியனது ஆட்சிக்காலமே யென்பதும் தெளிவாகப் புலனுதல காணலாம.

_ தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி III பகுதி 1 109-ம் கல்வெட்டு, பார்க்க. தொகுதி ;-ல் வெளிவந்த சின்னமனூர்ப் பட்டயத்தில் அளநாட்டுப் பிரமதேயம் அரிகேசரி தல்லுனர் என வரும் தொடரும் இதனை உறுதிப்படுத்துகின்றது.