பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் அருளிய அருள் நூல்கள்

திருவாதவூரடிகளால் திருவாய் மலர்ந்தருளப் பெற்று அழகிய திருச்சிற்றம்பலமுடையாளுகிய சிவபெருமானது திருக்கரத்தாற் செவ்விதின் எழுதிக்கொள்ளப் பெற்ற சிறப் புடையன திருவாசகமும் திருச்சிற்றம்பலக்கோவையும் என் பது முன்னர் விளக்கப் பெற்றது. மதுரையிற் குதிரைச் சேவகளுக எழுந்தருளிய சிவபெருமான் வழங்கிய பேரா னந்தமாகிய திருவருளின்பத்தைத் தூய தாமரை மலர் போலும் தமது திருவாயிலிருந்து வெளிப்படும் அழகிய சொற் களால் திருவாசகப் பனுவலாக அருளிச் செய்து, வஞ்சனை யைத் தரும் பிறவித் துன்பத்தை நாம் அறியாவண்ணம் நம் மஞேர்க்கு நன்னெறி காட்டியருளிய பெருந்தகையார் திருவாதவூரடிகளாவர். இவ்வுண்மையை,

பாய் பரியோன் றந்த பரமானந் தப்பயனைத் துளயதிரு வாய்மலராற் சொற்செய்து-மாயக் கருவாதை யாமறியா வாறு செய்தான் கண்டாய் திருவாத ஆராளுத் தேன்

என வரும் திருக்களிற்றுப்படியாரில் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனுள் விரித்துரைத்தமை காண்க.

மணிவாசகப்பெருமான் பாடிய திருப்பாடல்கள், திரு வாசகம் எனவும் திருச்சிற்றம்பலக்கோவை எனவும் இரு வேறு தலைப்பில் வைத்து எண்ணப்படினும் இவ்விரு நூல் களும் பேச்சிறந்த மாசில்மணியின் மணிவார்த்தை'யாகவே விளங்குதலால் திருவாசகம் என ஒரு பெயராலும் வழங்கப் பெற்று வந்துள்ளன. கோவைத் திருவாசகம் ” எனத் திருக்கோவையார்க்கு வழங்கும் பழம்பெயரால் இவ்வழக்கின் தொன்மை இனிது புலனும், முத்தியாகிய பேரின்பத்தை அடைவதற்குரிய பத்திநெறியின் இலக்கியமாக விளங்குவது திருவாசகம். உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத அன் பினை விளைக்கும் அகனேந்தினை யொழுகலாற்றை விரித் துரைக்கு முகமாகப் பத்திநெறியின் பயணுகிய பேரின்ப வாழ்வின் அனுபவ நிலையை விளக்குவது திருச்சிற்றம்பலக் கோவை. எனவே திருவாசகமும் திருச்சிற்றம்பலக்கோவை

ACACHACS

  • சிவப்பிரகாசம் செய்யுள்-1. மதுரைச் சிவப்பிரகாசர் உரை.