பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 107

என்ற பாடலில் பெரும்பற்றப் புலியூர் நம்பி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியைப் பின் வந்த கடவுள் மாமுனிவர் திருவாதவூரடிகள் புராணத்து விரித்துக் கூறினமை முன்னர் விளக்கப்பெற்றது.

1. திருவாசகம்

திருவாசகம் என்ற பெயர், திருவுடைய சொற்களால் ஆகிய அருள் நூல் எனப் பொருள் தருவதாகும். இதன்கண் அடைமொழியால் நின்ற திரு என்னுஞ் சொல், செல்வக் களிப்பால் மையலுறுதலும் அல்லல் மிகுதியாற் சோர்வடை தலும் இன்றி, எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்தற்குரிய உள்ளத்தின் நிறைவாகிய பேரழகினைக் குறிப்பதாகும். வாசகம்-சொல். திருத்தகவிற்றுகிய மனச்செம்மையினை வழங்கும் ஆற்றல் நிறைந்த சொற்களால் இயன்றமையின் இந்நூல் திருவாசகம் என்னும் பெயர்த்தாயிற்று. திருவாத

جيه سپرم کو • • لكي و بني إيثي به سي د گونه مو ه ،مر دپوره

ஆாடிகளது திருவாய் மலரில் தோன்றிய தருவாசக மென்னும் இத்தேனுனது, நெடுங்காலமாக உயிர்களைச் சூழ்ந்து பிணித்துள்ள பிறவியாகிய வலிய கட்டினை

“ م (گی ہمہ -ہ ;... , € τα بیات : ) همگی به او می ت: بي 3 ميل شم நீக்கித் துன்பத்திற்கேதுவாகிய அறியாமையை அகற்றிப் பேரின் பத்தைத் தரும் இயல்புடையதாகும். இவ்வியல் பினைத் திருவாசகத்தைப் பலகாலும் ஒதியுணர்ந்த பன்டைச் சான்ருேரொருவர்,

தொல்லை விரும்பிறவிச் சூழுத் தளை நீக்கி

அல்லலறுத் தானந்த மாக்கியதே- எல்ல்ே மருவா தெறியளிக்கும் வாத ஆர் எங்கோள் திருவா சகமென் னுந் தேன். '

என்ற பாடலில் இனிது விளக்கியுள்ளார். இறவாத இன்ப அன்பின் பயனுக விளங்கும் இத்திருவாசகச் செழும் பாடல் களே ஒதுந்தோறும் கேட்குந்தோறும் நினைக்குந்தோறும் நெஞ்சம் நெகிழ்ந்துருகக் கண்ணிர் பெருக நாவுரை குழற மெய்ம்மயிர் சிலிர்ப்பப் பேரின்ப வெள்ளம் கிளர்ந்தெழுதல் யாவரிடத்துங் காணப்படும் இயற்கை நிகழ்ச்சியாகும். இங் ங்னம் அன்பிளுல் ஒதுவார் கேட்பார் ஆகிய எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கவல்ல பேராற்றல் திருவாசகமாகிய அருள் நூலுக்கே உரிய தனிச் சிறப்பென்பது. தமிழ் நாட்டவ ரல்லாத வெளி நாட்டறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற உண்மையாகும்.