பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பன்னிரு திருமுறை வரலாறு


வைப்பு, மேற்குறித்தவண்ணம் பெரும்பற்றப் புலியூர் நம்பி யும் கடவுள் மாமுனிவரும் கூறிய இரு வேறு முறைகளில் எதனுடனும் முழுதும் பொருந்தி வரவில்லை. எனினும் இம் முறைவைப்பே நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வருகிற தெனத் தெரிகிறது. ஆகவே இம்முறைவைப்பு அடிகள் பாடிய கால அடைவினையொட்டி முறைப்படுத்தப்பட்டதன் றென்றும் திருவாதவூரடிகள் சொல்ல அழகிய சிற்றம்பல முடையார் எழுதிக்கொண்ட முறையில் இயற்கையாக அமைந்ததே இம்முறைவைப்பு என்றும் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

திருவாசகத்தில் சிவபுராணம் என்பது அச்சோப்

பதிகம் ஈருகவுள்ள தலைப்புக்கள் ஐம்பத்தெ

பதிகங்களில் உள்ள சொற்ருெடரையு

யும் அடியொற்றி அமைந்தனவாகும். தலைப்புக்

கள் அடிகள் காலத்திலேயே அவ்வப்பதிகங்களுக்குரிய

粤逝_翼翡、铬”翡兹 வழங்க.பெறற் துததல் கூடும் எனக் க: பொருத்தமுடையதாகும். இனி, சிவபுரான் மீ முத

பதிகப் பெயர்களையடுத்து இவற்றின் விளக்கமாக, சிவனது அநாதிமுறைமையான பழமை என்பது முதலிய கருத் துரைப் பகுதிகள் திருவாசக ஏட்டுச்சுவடிகளிலும் அச்சுப் புத்தகங்களிலும் குறிக்கப் பெற்றுள்ளன. ஆயின் இக்கருத் துரைப் பகுதிகள் திருவாசக ஏடுகளில் மிகவும் பழமையான ஏடுகளிற் காணப்பெறவில்லை. இத்தகைய கருத்துரைப் பகுதியும் பா, பாவினம்பற்றிய குறிப்பும் பிற்கால ஏடுகளிலும் அச்சுப் புத்தகங்களிலுமே காணப்படுகின்றன. இவற்றைக் கூர்ந்து நோக்குங்கா

ல் பதிகத் தலைப்பினையடுத்துக் காணப் படும் கருத்துரைப் பகுதிகள் பிற்காலச் சான்ருேரொருவரால் நன்காராய்ந்து குறிக்கப்பெற்றன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். திருப்பெருந்துறைக்குரிய பழைய புராண மொன்றில் திருவாசகப் பதிகங்களின் கருத்தினை விளக்கும் திருவாசக உண்மை என்ற பகுதி இடம் பெற்றுளது. இதற் கும் திருவாசக அச்சுப் புத்தகங்களிற் காணப்படும் கருத் துரைப் பகுதிக்கும் ஓரளவு தொடர்புண்டு. திருவாசகப் பதிக அடைவு முறையினை அறிதற்கும் பதிகங்களின் பொருளமைதியைத் தேர்ந்து துணிதற்கும் இக்குறிப்புக்கள் பெரிதும் பயன்படுவனவாகும்.