பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

பன்னிரு திருமுறை வரலாறு


அடைக்கலப்பத்திற்குப் பக்குவநிண்ணயம் , அஃதா வது வித்தும் அங்குரமும்போல வென்றல் என முன்னுேர் கருத்துரைப்பர். உயிர் தன்முனைப்படங்கித் தாழ்வெனுந் தன்மையோடும் இறைவனே அடைக்கலம் புகுதலாகிய இந் நிலை, மலமாசு நீங்கி இறைவனது அருளாரின்பப் பெரு வாழ்வை அடைதற்குரிய பக்குவத்தையடைந்தது என உறுதி செய்தற்குரிய அடையாளமாதலின், இதற்குப் பக்குவ நிர்ணயம் எனப் பண்டையோர் கொண்ட கருத்து மிகவும் பொருத்தமுடையதேயாகும்.

இதன்கண் அமைந்த பத்துப் பாடல்களும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய கொச்சகவொருபோகாய், ஒரோசையாக அமையாமல் அசையும் சீரும் இசையொடு புணர்த்து ஒதுமிடத்து, தாழிசை, கட்டளைக்கலித்துறை என இவ்வாறு வேறுபட்ட ஒசையுடைய பாடல்களாய் அமைந்தமையால் இப்பாடல்களைக் கலவைப்பாட்டு ' என முன்னேர் குறித்துள்ளார்கள். இப்பாடல்கள் கலிவிருத்தம் எனத் தாண்டவராயர் உரையிற் குறிக்கப்பட்டிருத்தல் யாப்பிலக்கணப் பயிற்சியில்லாமையால் இடைக்காலத்தில் நேர்ந்த பிழையெனக் கருதவேண்டியுளது

இதன்கண் இறைவனது கருணையின் உயர்வும் அவனடி அடைந்த அடியார்களின் பெருமையும் தமது சிறுமையும் கூறி, உணர்வுடைய ஆன்மாவாகிய தம்மையும் உணர்வற்ற உடைமைப் பொருளாக எண்ணி ஏன்றுகொள்ளுதல் வேண்டும் எனத் திருவாதவூரடிகள் இறைவனை வேண்டிய திறம் உணர்ந்து போற்றற்குரியதாகும்.

உடு. ஆசைப் பத்து

திருவாதவூரடிகள், உலகப்பொருள்களில் தமக்குள்ள ஆசையை அறவே நீக்கித் திருவருளில் தாம் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றி அருளும்வண்ணம் தம்மை ஆட் கொண்டருளிய இறைவனை இறைஞ்சி விண்ணப்பிக்கும் முறையில், பரவிப்போற்றிய பத்துத் திருப்பாடல்களையுடைய பதிகமாதலின், இஃது ஆசைப்பத்து என்னும் பெயருடைய தாயிற்று. இதற்கு 'ஆத்துமவிலக்கணம்-அஃதாவது ஆன்ம

ரூபத்தையறிதல்' எனக் கருத்துரைப்பர் முன்னேர்.

" கருவியுறும் ஊனுடற்கண் வாராமல் திருவருளிற் கலப்பதற்கே

அரனடியைப் புகழ்ந்து பெருகார்வமொடு பாடுதலே

ஆசைப்பத்தாம் ”