பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

பன்னிரு திருமுறை வரலாறு


மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்றனலே மருவு பசு கரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரமதனில் துரியா தீதம்

தோன் றமுயல் சிவானுபவம் சுவானு பூதிகமாம் "

(சித்தியார் -286)

எனவரும் திருவிருத்தத்துள் அருணந்தி சிவாசாரியார் விளக்கியுள்ளார். இது காணுங் கரணங்களெல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் எனவரும் தொடருக்கு அமைந்த விளக்கமாதல் அறிக.

ச.கூ. திருப்படையாட்சி

பாண்டி நன்னடுடையாளுகிய இறைவனுடைய படை வீரராம் திருத்தொண்ட்ர்கள், மாயப் படையினை வென்று தம் தலைவனைக் கண்ணுரக் கண்டு, சீவோபாதி ஒழிந்து, சிவ மாந்தன்மை யெய்தி ஒக்க உறைந்து, இவர் அவைேடு அவன் இவரோடு பிரிவறக் கூடி, அண்டர் நாடாளும் ஆட்சி யநுபவத்தினை எண்ணி வியந்துரைக்கும் பனுவலாதலின் இது திருப்படையாட்சி என்னும் பெயர்த்தாயிற்று, இந்நுட் பம், “ பாண்டி நன்னடுடையான் படையாட்சிகள் பாடுது மாகாதே’ எனவரும் இப்பதிகத் தொடரால் இனிது விளங்கும்.

இதன் கண், மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடு மாகாதே’ எனவும், நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந் தன எனவும், பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் எனவும் இந்திரஞால இடர்ப் பிறவித்துயர் ஏகுவது' என வும், மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறும்’ என வும், கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கணக்கறும்

பெண்ண லி ஆணென நாம் என வந்த பிணக்கறும் என வும், சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும், அங் கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் எனவும் உயிர்கட்குத் தடையாக உள்ள தொல்லைகள் ஒழியும் முறை யினை அடிகள் தெளிவாகக் குறித்தருள்கின்ருர். இப்பொரு ளமைப்பினை யுணர்ந்த முன்னேர் இப்பதிகத்திற்குச் சீவோ பாதி யொழிதல் எனக் கருத்துரை வரைந்தனர். உயிர் கட்குத் தடையாகவுள்ள தொல்லைகள் நீங்கும் எனவே, உயிர்க்கு உறுதி பயப்பனவாகிய எல்லா நலங்களும் ஒருங்கு எய்தும் என்பதும் உடன் கூறியவாருயிற்று. மாலறியா