பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 223

  • முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனே ப்

பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக் கருளியவா ருர் பெறுவார் அச்சோவே '

என்பது இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டாகும். இறைவனை அடைதற்குரிய நெறிகள் முத்தி நெறி, பத்தி நெறி என இரு வகைப்படும் என்பதும், அவற்றுள் முத்தி நெறி என்பது சரியை கிரியை யோக ஞானங்களால் முதிர்ந்த அறிவுடைய பெருமக்கள் மட்டுமே அறிந்து கடைப்பிடித்தற்குரிய அருமை உடையதென்பதும், பத்தி நெறி என்பது உலக மக்கள் அனைவரும் அன்பினுற் பின்பற்றுதற்குரிய எளிமை வாய்ந்த வழியென்பதும், முத்தி நெறியறியாத மூர்க்கரொடு கூடிக் காலங் கழிக்கின்ற தம்மை, இறைவன் தானே எளிவந்து பத்தி நெறி அறிவித்துப் பழவினைகளெல்லாம் அறவே சிதைந்தொழியச் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி ஆண்டு கொண்டருளினுன் என்பதும் ஆகிய உண்மைகளைத் திருவாதவூரடிகள் இத்திருப்பாடலில் வெளியிட்டு வியந்து போற்றியுள்ளார்.

அடிகள், சிவாதுபவமாகிய பேரின் பத்தினையடைதற்குத் தாம் மேற்கொண்ட சாதனங்கள் யாவை என எண்ணிப் பார்த்து, தாம் அதன் பொருட்டுச் செய்த முயற்சிகளாக எதுவும் புலப்படாமையால், முயற்சியும் உளப்பாடும் இன்றி. இறைவனருளால் தமக்குக் கிடைத்த சிவாநுபவத்தை வியந்து உரைக்கும் முறையில் இப்பதிகப் பாடல்கள் அமைந் திருத்தலால் அநுபவ வழியறியாமை என இதற்கு முன்ளுேர் கருத்துரை வரைந்தனர். மொழியும் ஈசர் போக சுகம் எனக்கு அளித்தார் ஆர்பெறுவார் எனும் அருமை புகறல் அச்சோ என்பது திருப்பெருந்துறைப் புராணம்.

சிவபெருமானை அடைந்து இன்புறுதற்குரிய சாதன மாகிய திருவைந்தெழுத்தையும் குருவாய் எழுந்தருளி வந்து அவ் அருமறைப்பொருளை உபதேசித்தருளிய இறைவன் திருவருளையும் போற்றி, 'நமச்சிவாய வாஅழ்க, நாதன்தாள் வாழ்க எனத் தொடங்கிய திருவாசகமாகிய் அருள்நூல்,

செம்மை நலம் அறியாத சிதடரொடுந் திரிவேனே மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையும் ஓர் பொருள்ாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மை யெனக்கருளியவா ருர்பெறுவார் அச்சோவே'