பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

பன்னிரு திருமுறை வரலாறு


கருதிய ஓவியத்திற்கு முன்மாதிரியாக ஒரு வரைபடத்தினை அமைத்துக்கொண்டு அதனைப் பார்த்து அம்முறையில் எழுதுதல் மரபு. அங்ங்னம் முன்மாதிரியாகக் கொள்ளப் படும் வரைபடமே இங்குப் படிச்சந்தம் எனக் குறிக்கப் பட்டது.

மேல் எடுத்துக் காட்டிய வண்ணம் பாண்டிக்கோவைச் செய்யுட்களும் திருச்சிற்றம்பலக்கோவைச் செய்யுட்களும் சொற்பொருள் நடையால் ஒத்துக்காணப்படினும், பாண்டிக் கோவைச் செய்யுட்களினும் திருச்சிற்றம்பலக்கோவைச் செய்யுட்கள், நவில் தொறும் சுவைமிகத்தரும் சொற் பொருள் நலங்களின் மேம்பட்டு விளங்குவனவாய் அடிகளது திருவருட் புலமையினை இனிது புலப்படுத்தி நிற்றல் அறியத்தக்கதாகும்.

பகற் பொழுதில் தலைமகளைக் கண்டு அளவளாவி மகிழ் தற்குரிய இடம் இதுவெனக் குறித்த தோழி, தலைமகளுடைய ஆயத்தாராகிய மகளிரைப் பல்வேறு விளையாடல்களைக் குறித்துத் தலைமகளை விட்டுத் தம்மியல்பால் பிரியச்செய்து, தமியளாய் நின்ற தலைமகளை உடன்கொண்டு, யாமும் போய் மயிலாடல் காண்போம் எனக் கூறிக் குறித்த அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும் நிலையில் அமைந்தது.

தினை வளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச் சிற்றில்

முற்றிழைத்துச் சுனை வளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார் வினை வளம் நீறெழ நீறணியம்பலவன் றன் வெற்பிற் புனை வளர் கொம்பான்னுய் அன்னகாண்டும்

புனமயிலே (118) எனவரும் திருக்கோவையாராகும். " இறைவனகிய தன்னைத் தொழுது கொண்டு துயிலெழும் அன்பர்களது வினையினது பெருக்கம் பொடியாகச் சிதையுமாறு தன் திருமேனிக்கண் திருநீற்றையணியும் தில்லைச் சிற்றம்பலவனது மலையிலே அழகுபெற அணி செய்யப்பெற்று வளர்ந்த பூங்கொடியினை ஒப்பாய் ! தினையாகிய வளத்தைக் காத்துச் சிலம்பிற்கு எதிரே (ஓசையுண்டாகக்) கூவியழைத்துச் சிறு வீட்டினை முழுவதுமாகச் செய்து முடித்து, சுனை நீரிற் பாய்ந்து விளை யாடி, அத்தன்மையவாகிய பொழிலிடத்தே (ஆடும்) மயிலைக் காண்போமாக்” என்பது இதன் பொருளாகும். இதன் கண் அன்ன காண்டும் புனமயிலே என்ற தொடர்க்கு