பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 233

" அத்தன்மையவாகிய புனமயிலைக் காண்பேம் யாம்' எனப் பொருள் கூறி, அத்தன்மையவாகிய மயிலென்றது, பொரு ளதிகாரத்திற் கூறப்பட்ட தலைமகள், தான் தமியளாய் நின்று கண்ட மயிலை. இயற்கைப் புணர்ச்சியது இறுதிக்கண் தோழி தனது வாட்டத்தை வினவியபோது, யான் ஓர் இள மயில் ஆலுவது கண்டேன்; அதனை நீயும் காணப்பெற்றிலை என வாடினேன் ' என்று உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப்பற்றி அம்மயிலைக் காண்டும் என்ருளாயிற்று' என விளக்கம் கூறுவர் பேராசிரியர். ஈண்டுப் பேரா சிரியராற் பொருளதிகாரம் எனச் சுட்டப்பட்டது இறையனர் களவியலுரையாகும்.”

'பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக் கலாவங் கொளவிரித்து, முளையிள ஞாயிற்று இளவெயில் எறிப்ப ஓர் இளமயில் ஆடுவது கண்டு நின்ருள் ' என்பது, இறையனர் களவியலுரை. இவ்வுரையிற் புனைந்து உரைக்கப்பட்ட மயிலையே, அன்னகாண்டும் புனமயிலே ' எனத் தோழி கூற்றில் வைத்துத் திருவாதவூரடிகள் குறித்துள்ளார் என்பது பேராசிரியர் தரும் விளக்கத்தால் உய்த்துணரப்

படும்.

1. இறையனர் களவியலுக்குப் பொருளதிகாரம்' என்னும் பெயருண்டென்பது, ' இது பொருளதிகாரம் ! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்தா ளுகற்பாலது!" எனவரும் களவியலுரைப் பகுதியாற் புலளும்.