பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் திருக்கோவையும் 329

னுடைய நாமங்கேட்டாள் ' எனவரும் திருத்தாண்டகத் தில் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாளுள், தன்னை மறந் தாள் தன் நாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என வரும் தொடரிலும் இடம் பெற்றி ருத்தல் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

தன்பால் அன்புடைய அடியார்களது வாக்கிலும் மனத்திலும் பிரியாதெழுந்தருளியிருக்கும் இறைவனது அருட்டிறத்தை,

வாயும் மனமும் பிரியா இறை ' (திருக்கோவை - 289)

என அடிகள் புகழ்ந்து போற்றியுள்ளார். இத்தொடர்,

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் (6-8-5)

எனவும், வாயான மனத்தானை மனத்துள் நின்ற கருத் தானை கருத்தறிந்து முடிப்பான்தன்னை" (6-19-8) எனவும் வரும் தேவாரத்தொடர்களை ஒத்தமைந்திருத்தல் உணர்தற் குரியதாம். இவ்வாறே செய்ம்முக நீல மலர் தில்லைச் சிற்றம்பலத்தரற்கு (356) எனவரும் திருக்கோவைத் தொடர், செய்ந்நின்ற நீலமலர்கின்ற தில்லைச் சிற்றம்பல வன் (4-80-5) என வரும் திருவிருத்த அடியினையும், தில்லையிறையமைத்த திறலியல்யாழ் (375) எனவரும் திருக்கோவைத் தொடர், எம்மிறை நல்வினை வாசிக் குமே (4-112-7 எனவரும் திருவிருத்தத் தொடரை யும் அடியொற்றியமைந்துள்ளமை ஒப்பு நோக்கத்தக்க தாகும்.