பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பன்னிரு திருமுறை வாலாறு

பெற்றுள்ளன என்பது முன்னர் விளங்கப்பெற்றது. உயிர்களின் அறிவை விளங்கவொட்டாது மறைத் திருத்தல் ஆணவ மலத்தின் செயல். எல்லா உயிர் களும், மாயையால் ஆக்கப்பட்ட உடல், கருவி, உலகு, நுகர் பொருள் என்பவற்றைப் பெற்று அவற்றின் உதவி யால் அறியாமை சிறிது சிறிதாக நீங்க அறிவு விளங்கப் பெறுவன. இங்ங்னம் உயிர்களது அறிவு விளங்குதற்குக் கருவியாய் நின்றுதவுதல் மாயையின் செயல். உயிர்கள் மலம் மாயை என்னும் இரண்டின் அகமாய் நின்று வினை செய்யுங்கால் நல்வினை தீவினை என்னும் இரு வினைகள் நிகழ்வன. இவ்வினைகளால் உண்டாகும் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதியும்படி செய்தல் கன்ம மலத்தின் செயலாகும்.

ஆணவ மலத்தால் அறியாமையும், மாயை கன்மங் களால் அவ்வறியாமை நீங்கி அறிவு விளங்கப் பெறுதலும் உயிர்கள்பால் இடையருது நிகழ்வன. இவற்றுள் ஆணவ மலம் ஒன்றே செம்பிற் களிம்பு போன்று உயிரோடு ஒற்றித்து அதன் விழைவு அறிவு செயல் ஆகிய ஆற்றல் களைத் தொன்று தொட்டு மறைத்து நிற்பது. மாயையும் கன்மமும் அம்மல நீக்கத்திற்கும் உயிர்களின் அறிவு விளக்கத்திற்கும் துணை செய்வனவாய் இடையேயொரு காலத்து வந்து வாய்த்தனவாகும். மல் நீக்கத்திற்கு உதவி செய்யும் இவ்விரண்டும், ஆணவ மலத்தோடு உடன்நின்று அதன் சார்பில் தாமும் ஒரோவொருகால் மயக்கத்தை விளைத்தல் பற்றி மலம் என வழங்கப்படுவனவாயின. அறியாமையைச் செய்யும் மலத்தின் வலியை ஒடுக்கி உயிர் கட்கு அறிவினை விளங்கச் செய்தற் பொருட்டே எல்லாம் வல்ல இறைவன் மாயையின் காரியமாகிய பல்வேறுடம்பு களையும் அவை தங்குதற்குரிய பல்வேறுலகங்களையும் அவை நுகர் தற்கேற்ற பல்வேறு நுகர் பொருள்களையும் மாயையாகிய முதற்பொருளினின்றும் படைத்து வழங்கு கின்ருன். இவ்வாறு வழங்கும் இறைவனது நோக்கம், உயிர்கள் உலக நுகர்ச்சிகளால் நன்றுந் தீதுங் கண்டு அறிவு விளங்கப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள மும்மலப் பிணிப்பினின்றும் விடுபட்டுப் பேரின்ப வுருவினதாகிய சிவத்தோடு இரண்டறக் கலந்து தாமும் சிவமுமாய் நிலை

1. பன்னிரு திருமுறை வரலாறு முதற் பகுதி - பக்கம் - 674-676.