பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 335

திகழ்தலும், மலந்தீர்ந்த உயிர் தன் பொருட்டன்மை சிதையாதிருக்க, அவ்வுயிரின்கண் சிவம் புலப்பட்டுத் தோன்றி அதன் உடல், கருவி கரணங்களை அகத்திட்டு விளங்குதலும், பேரருளாளனுகிய இறைவன் உயிர்களின் மலத்துன்பத்தை நீக்கித் தன் பேரருளின்பத்தை உயிர்கட்கு வழங்கும் அருட் குறிப்புடையணுதலும், அம்முதல்வன் தன்பால் அன்புடைய அடியார்கட்கு அருள் வழங்குதற் பொருட்டுத் தில்லைச் சிற்றம்பலமாகிய அருள்வெளியில் ஒளி யுருவினனுக நின்று ஆடல்புரிதலும் இங்கெடுத்துக் காட்டிய திருவாசகத் தொடர்களால் இனிது புலனுகும். உயிரும் சிவ மும் பொருட்டன்மையால் இரு வேறு பொருள்களாதலும், உயிர்கள் தொன்மையே மும்மலப் பிணிப்புடையனவா யிருக்க, முற்றுணர்வும் பேரருளும் அளவிலாற்றலும் வரம்பிலின்பமும் உடையணுய் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவன், உயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் விடுவித்து அவ்வுயிர்களைச் சிவமாகிய தன்னுடன் பிரிவின்றி ஒன்றும்வண்ணம் தன் அருள் ஒளியில் அகத்திட்டுக் கொள் ளுதலும் மேற்குறித்த அடிகள் வாய்மொழிகளால் நன்கு பெறப்படுதலின், திருவாதவூரடிகள் சைவ சித்தாந்த சமயத் தினராதல் நன்கு தெளியப்படும். இறைவனது அருளுப காரத்தால் மும்மலப் பிணிப்பினின்றும் நீங்கிய துய உயிர்கள் பால் அம்முதற்பொருளாகிய சிவம் முனைத்துத் தோன்றி அவ்வுயிர்களைத் தன்னுளடக்கித் தன்னையே காட்டி நிற்கும் என்பது,

சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித்தாமூலம் அத்தகை யான்மா யரனை யடைந்தற்ருற் சுத்த சிவமாவரே சுத்த சைவரே. (திருமந்திரம்-1440) எனவும்,

அளுதி சீவனம் மலமற்றப் பாலாய் மனதியடங்கத் தனக்கண்டரணுய்த் தளுதிமலங்கெடத் தத்துவா தீதம் வினவுநீர் பாலாதல் வேதாந்த வுண்மையே. ( டிை -2401) எனவும்,

உயிரைப் பரனை யுயர் சிவன் றன்னை அயர்வற் றறிதொந்தத் தசியதற்ை செயலற் றறிவாகி யுஞ்சென்றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே. ( டிெ - 2402) எனவும் திருமூல நாயனரும்,