பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

பன்னிரு திருமுறை வரலாறு


லியல்பாதலின், இறைவனருளால் மலம் மாயை கன்மங் களின் பிணிப்பு நீங்கிய பொழுதே அவற்ருேடு உடனிகழும் இவ்வுணர்களும் அணுவணுவாய்த் தேய்ந்து தம்மை விட்டு ஒழிந்தன என்பதனை,

வான்கெட்டு மாருதமாய்ந்தழல்நீர் மண்கெடினும் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேனங் கொட்டாமோ. எனவரும் திருப்பாடலில் திருவாதவூரடிகள் தமது சிவாது பவத்தில் வைத்துத் தெளிய விளக்கியுள்ளார். பாசப் பிணிப்பினின்றும் விடுபட்டு இறைவன் திருவருளில் ஒன்று பட்டுத் திளைத்தலாகிய வீட்டு நிலைக்கண் நிகழும் சிவாது பவமாகிய இதனை,

தானும் அழிந்து தனமும் அழிந்துநீ டுனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நானறியேனே (திருமந்திரம் - 2951) எனவும,

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள்ளாகி அருளா லழித்திடும் அத்தனடிக்கே உருளாத கன்மனம் உற்று நின்றேனே (ഒു. 2952) எனவும் வரும் திருப்பாடல்களில் திருமூலநாயனர் நன்கு விளக்கியுள்ளார்.

பாசப்பிணிப்பினின்றும் நீங்கிய தூய உயிர், இறைவ னு ன் இரண்டறக் கலந்த நிலையில், இதற்கு முன் அதன் கண் நிகழ்ந்த புறப்பொருளுணர்வும் தன்னைப்பற்றிய உணர்வும் முற்றிலும் மறைந்தொழிய, இறைவனது மெய் யுணர்வு மட்டுமே மேற்பட்டு விளங்கத் தன்னுணர்வு ஆதனுள் அடங்கி, உரைவரம்பிகந்த சிவானந்தமாகிய பேரின்ப வெள்ளத்திற் படிந்து இன்புறும் இவ்வின்ப நிலையில், உயிரானது தன் பொருட்டன்மையிற் சிறிதும் கெடாதிருக்கும் என்பதனை,

முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தவனு போகத்தைத் துய்த்தலணு-மெத்தவே @Tuä கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல்மலம் அன்புடனே கண்டுகொள் அப்பா (உண்மை -50) எனவரும் 8 உண்மை விளக்கப்பாடலில் திருவதிகை மனவாசகங்கடந்தார் தெளிய விளக்கியுள்ளமை அறியத்