பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 487

கண்டதை யன்றன் றென விட்டுக் கண்ட சத்தாய் அண்டன ஆன்மாவில் ஆய்ந்துணரப்-பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட சானத்தில் தீர்விடம்போற் றன்.

1.சிவஞானபோதம்-வெண்பா-58) என்னும் செய்யுளாகும். இதன் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

கண்ட இவை யல்லேன் நான் என்றகன்று, காளுக்

கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டிகுெடும் உளத்தவன்ருன் நின்ற கலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்று வன் வேறின்றி விண்டகலும் மலங்களெலாம் கருடதியானத்தால்

விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டை மறைகளும் அது நாளுனே னென்று

பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் கானே.

(சிவஞான சித்தியார்.293) எனவரும் சித்தியார் திருவிருத்தமாகும். இவையிரண்டும்,

நீயது வான யென நின்ற பேருரை ஆயது நாளுனேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர் நந்தி பேரருள் ஆயது வாயன க் தானந்தி யாகுமே. (2577) எனவும்,

கருடன் உருவங் கருதும் அளவிற் பருவிடந் தீர்ந்த பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்தஅப் போதே திரிமலந் தீர்ந்து சிவனவ ளுமே. (2659) எனவும் வரும் திருமந்திரப் பாடல்களின் பொருளை அடி யொற்றியமைந்திருத்தல் அறியத் தக்கதாகும்.

ஆன்மா, சிவனுக்கு உடைமையாதலே அஞ்செழுத்து உச்சரிக்கும் நிலையில் வைத்துநோக்கித் தன் உடம்பி னுள்ளே இதயம் பூசைத்தானமாகவும், உந்தி ஓமத்தான. மாகவும், புருவநடு தியானத் தானமாகவும் கொண்டு, புறம்பே ஞானபூசை செய்யும் முறைப்படி உள்ளத்தாமரை தில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் ஆம் முதல் வஜனத் தியானித்து, கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்வகை மலர்களால் அருச்சித்து, அத்திரமந்திரத் தாலே குண்டலித்தானமாகிய உந்தியிலே ஞான அனலை