பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் နိူင္တို႕

என வரும் திருமந்திரிப் பாடல்களை உதாரணமாகக் காட்டியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி புணரற்பால தாகும்.

உயிரானது, மேற்குறித்த காரிய அவத்தைகளை அடைதற்குக் காரணமாகக் கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று அவத்தைகளை அடையும். அவற்றுட் கேவலம் என்பது, உயிர் தனக்குரிய விழைவு, அறிவு, செயல் என்பவற்றின் நிகழ்ச்சி சிறிது மின்றித் தனித்துத் தன்னளவில் நிற்கும் நிலையாகும். சகலம் என்பது, உடல் கருவிகள் முதலியவற்ருேடுங் கூடி விழைவு அறிவு செயல் ஆகிய அவை ஒரு சிறிது விளங்க நிற்கும் நிலை. சுத்தம் என்பது, உயிர் தன்னைப் பற்றிய ஐவகை மலங்களும் நீங்கிச் சிவத்தோடுகூடி விழைவு அறிவு செயல்கள் எங்கு மாய்ப் பரவி விளங்கும் நிலையாகும். இம் மூவகை நிலை களையும் விளக்கும் முறையில் அமைந்தது,

கேவல சகல சுத்தம் என்று மூன்றவத்தை ஆன்மா மேவுவன், கேவலம் தன்னுண்மை, மெய் பொறிகளெல்லாம் காவலன் கொடுத்த போது சகலனும், மலங்களெல்லாம் ஒவினபோது சுத்தம் உடையன் உற்ப வந் துடைத்தே. (227)

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். இது,

தற்கேவலம் முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறழ்வதசம் தப்பால் புரிசுத்த கேவலஞ் சாக்கிரத் தப்பாற் புரிய அதிசுத்த மாமே. (2246)

எனவரும் திருமந்திரத்தைப் பின்பற்றியமைந்த தாகும்.

உயிரானது ஒரு செயலு மின்றி ஆணவமலத்தோடு

மட்டும் கூடிய நிலையாகிய கேவலத்தின் இயல்பினை விரித்

துரைப்பது,

அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்களோடுஞ் செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்கள் இல்லான் குறியிலன் கருத்தா அல்லன் போகத்திற் கொள்கை யில் லான் பிறிவிலன் மலத்திகுேடும் வியாபி கேவலத்தில் ஆன்மா. (228)

என வரும் சிவஞான சித்தியாராகும். இது,