பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் {

மாயை தனையுதறி அல்வினை யைச் சுட்டுமலம் சாய அமுக்கி அருள்தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாசிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார் பரதம் தான். {3్క-శిf} என வரும் செய்யுட்களாகும். இவை,

மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு

மருவிய அப்பும் அனலுடன் கையும்

கருவின் மிதித்த கமலப் பதமும்

உருவில் சிவாய நமலென ஒதே. (திருமந்திரம்-2798)

எனவும்,

திருந்துநற் சீயென் று.தறிய கையும் அருந்தவர் வாவென் றனைத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையும் திருந்தத் தீ யாகும் திருநிலை மவ்வே, (ഞ്ച്-2797) எனவரும் திருமந்திரப்பாடல்களின் பொருளை அடியொற்றி யமைந்த விளக்கங்களாகும்.

அரன் துடி தோற்றம், அமைத்தல் திதியாம், அரன் அங்கி தன்னில் அறையிற் சங்காரம்

அரனு ற் றனைப்பில் அமருந்திசோதாயி அரனடி யென்றும் அனுக்கிரகம் என்னே. (2800)

எனவரும் திருமந்திரத்தைச் சொற்பொருளால் ஒத்து அமைந்தது,

தோற்றந் துடியதனில், தோயுந் திதியமைப்பில், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. (உண்மை விளக்கம்-41)

எனவரும் உண்மை விளக்கமாகும்,

சிவன், அருள், ஆன்மா. திரோதம், மலம் என்னும்

இவ்வைந்தும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தின் பொருள் முறையாம். பக்குவப்பட்ட ஆன்மா நகரம் முதலாக ஒதாது சிகாரம் முதலாக ஒதுதலே திருவருளைப் பொருந்தும் முறை என அறிவுறுத்துவது,

சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்

அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று

நம்முதலா ஒதிலருள் நாடாது நாடும்அருள்

சிம் முதலா ஒதுநீ சென்று, (41)