பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

பன்னிரு திருமுறை வரலாறு


முடியாத பெருமையையுடையவனும் பிறர் அறிதற்குக் கருவியாகிய மெய்யுணர்வாக விளங்குபவனும் எம்பெருமா கிைய இறைவனேயாவன். நுண் ணறிவு வாய்க்கப் பெரு தார் தாக்கற்ற நூற்புலமையொன்றனையே கருவியாகக் கொண்டு தமக்குத் தோன் றியன பலவும் பேசித்திரிக. நீலமணிபோலும் கண்டத்தினையுடைய சிவபெருமானுகிய இறைவனது பெருமையே தனக்கு மேலாவதெதுவுமின்றி உயர்ந்து விளங்குவது. தவச்செல்வராகிய பெருமக்கள் எந்தச்சமய வேடத்தை மேற்கொண்டு தன்னை எந்த உரு வத்திற் சிந்தித்துப் போற்றுகின்ருர்களோ அன்பால் நினைந்து வழிபடும் அடியார்களாகிய அவர்களுக்கு அவர் கள் நினைந்த திருமேனி கொண்டு தோன்றி அருள் வழங்கு பவன் அப்பெருமானேயாவன். மதிவளர் சடைமுடி யிறைவனை அறிவிலுைம் எற்புச் சட்டமாகிய உடம்பினுலும் இகழாது போற்றி வழிபடும் அன்பர்கள் அவனது திருவடி யினையடைந்து இன்புறுவதல்லது. இவ்வுலகில் எலும்போ டியைந்த யாக்கையைப் பெற்று மீளப்பிறவார். எம்பெரு மானே உள்ளத்தே நினைந்து போற்றும் சிந்தையுடையராய் வாழுந்திறம் அவனது திருவருளாற் கிடைத்தற்குரியதன்றி மக்களால் முயன்று பெறுதற்குரிய எளிமையுடையதன்று. இறைவனது திருமேனி செங்கதிர் தோன்றும் காலை ப் பொழுதினைப் போன்று ஒளி திகழும் செம்மேனியாகும். அதன்கண் பூசப்பெற்று விளங்குந் திருநீறு நண்பகற் பொழுதினையொத்து வெண்மையான ஒளியை வீசுகின்றது. இறைவனது செஞ்சடை மாலைப்பொழுதிற் செவ்வானத் தின் தோற்றமுடையாய்த் திகழ்கின்றது. உலகமுய்ய நஞ்சினை புண்டடக்கிய அப்பெருமானது திருநீலகண்டம் நள்ளிருட்பொழுதின் தொற்றமுடையதாய் வி ள ங் கு கின்றது. என இவ்வாறு காரைக்காலம்மையார் இறை வனைப் படர் க்கையில் வைத்துப் பாடிப் போற்றுந் திருப் பாடற் குறிப்புக்களால், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இ ைற வ ன் உலகப்பொருளொன்றினுந்தோய்வின் றிச் சிவம் எனத்தனித்து நிற்கும் இயல்பும், உலகெலாமாகி வேருய் உடனுமாய் உயிர்களுக்கு அருள் வழங்குமாற்ருல் சிவத்துடன் பிரிக்க முடியாத திருவருட் சத்தியாக விளங் குஞ் சிறப்பும், உலகத்தைப் படைத்துக் காத்து ஒடுக்கி இயக்குதலாற் பதியெனப் பெயர்பெற்றுத் தனிமுதல்வகை விளங்குந் தகவும், உலகமே உருவமாக விளங்கும், அம்