பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

பன்னிரு திருமுறை வரலாறு


மணலால் காமனது உருவத்தை யெழு தி அவன் கையில் தாங்கிய கரும்பு வில் ையும் மலர்க்கணைகளை யும் எழுதத் தொடங்குமளவில் சிவபெருமான் எருதேறி உலாவருதலைக் கண்டு. நன்றறிவார் சொன்ன நலத்தினேயிழந்து நாணி ழந்து அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி முதலியன நீங்கக் கைவலே கழல மயக்கமுற்று வறிதே தின் இருழிந்தாள்.

மங்கைப் பருவத்தினளாகிய பெண்ணுெருத்தி, தான் வளர்த்த நாகணவாய்ப் பறவையோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது செம்மேனியம்மாளுகிய இறைவன் வெள்வி.ை மேல் உலாவருகின்ருன். வெள்ளிமலையில் வீற்றிருக்கும் ஞாயிற்றைப்போன்ற அப்பெருமானது சடை முடியைக்கண்ட அம்மங்கை, மனநெகிழ்ந்து இறைவன் அணிந்த கொன்றை மாலையையும் தானணிந்த சேலையை யும் அவனது மேனியழகையும் தனது மேனி வனப்பினை யும் ஒப்புநோக்கித் தன் நானழிதலை நோக்காது உள்ளம் உருக ஒழியாத வேட்கையாகிய பெருவெள்ளத்திடையே வீழ்ந்து வெய்துயிர்த்தாள்.

தீந்தமிழின் தெய்வ வடிவினைப்போலும் அறிவு நலஞ் சான்ற மடந்தைப் பருவத்தாள் ஒருத்தி, தன்னையொத்த தோழியர்கள் புடைசூழ அமர்ந்து யாழ் நரம்பினை இசைத் துச் சிவபெருமானேக் குறித்துப்பாடப்பட்ட மடல் என்னும் பிரபந்தத்தினையும் . i னப்பாடல் யும் பாடி மகிழ்கின் ருள். அந்நிலையில் இறைவன் உலாவர, அவன் ஊர்த்தருளிய இடபத்தின் மணியொலியைக்கேட்டு விரைந்தெழுந்து அப்பெருமானைக் கண்டு காதல் கூர்ந்து தன்மேனியழகினை இறைவனது கொன்றைமாலை கவர்ந்து கொள்ளத் தான் அக்கொன்றைமலரின் நிறம்போலும் பசலை நிறத்தை மேற் கொண்டு பெரிதும் வருத்தமுற்ருள்.

அரிவைப் பருவத்தினளாகிய பெண்ணுெருத்தி, தான் பயின்ற இன்னிசை வீணையை யெடுத்து இறைவனது

1. பன்னிரண்டு வயதுமுதல் பதின்மூன்று வயதுவரையுள்ள பெண் மங்கைப் பருவத்தினளாவாள்.

2. பதின்ைகுமுதல் பத்தொன்பது வயது வரையுள்ள பெண் மடந்தைப் பருவத்தினளாவாள்.

இருபதுமுதல் இருபத்தைந்து வயது வரையுள்ள பெண் அரிவைப் பருவத்தினளாவாள்.