பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634

பன்னிரு திருமுறை வரலாறு


மக்கட் பிறப்பினுலடைதற்குரிய பெரும் பயன் இதுவன்ருே என நக்கீர தேவர் வியந்து கூறுவதாக அமைந்தது,

பெற்ற பயனிதுவே யன்றே பிறந்தியான் கற்றவர்க ளேத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத் தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக் காளாகப் பெற்றேன் அடைந்து, என்ற பாடலாகும். இதன்கண் கற்றவர்களேத்துஞ்சீர்க் காளத்திக் கொற்றவர் ' என்றது, கற்றல்கேட்டலுடை யார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப் பெற்ற மூர்ந்த ... பெம்மான் எனத் திருஞான சம்பந்தர் கூறிய பொருளுரையை நினைவுபடுத்தல் காணலாம்.

இறைவன் தன்னை அன்பினுல் நினைந்து போற்றும் மெய்யடியார்க்கு அருள் செய்தல் கருதி அவரவர் விரும்பிப் போற்றிய பலவேறு திருவுருவங்களைக் கொண்டு தோன்றினும் யாவராலும் உணர்தற்கரிய இறைமைத் தன்மையுடைய முதல்வன் ஒருவனே யென்பார்.

  • உருவு பலகொண் டுனர்வரிதாய் நிற்கும் ஒருவன் ’

என்ருர் நக்கீரர். தானுெருவனுமே பலவாகி நின்ருவா எனவரும் திருவாசகத்தொடர் ஈண்டு நினைவுகூரத் தக்க தாகும்.

அமிழ்தத்தைப் பெறவிரும்பித் தேவரும் அசுரரும் கூடிப் பாற்கடலைக் கடைந்தனர். அந் நிலையிற் கடலிடையே கருமலையொன்று வெளிப்படுவது போன்று ஆலகால நஞ்சு கிளர்ந்தெழுந்தது. நஞ்சினைக் கண்டு அஞ்சிய அவர்கள் தப்பிச் செல்லுதற்குரிய வழியறியாது நடுக்கமுற்றனர். அவர்தம் துன்பத்தைக் கண்டு உளமிரங்கிய சிவபெருமான் அந் நஞ்சினையுண்டு மிடற்றிலடக்கினன். அப்பெருமானது பேரிாக்கத்தாலும் அருட்செயலாலும் இவ்வுலகம் அழியாது நிலைபெற்று வருவதாயிற்று. இச்செய்தினை,

மலைவரும்போல் வானவரும் தானவரும் எல்லாம் அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக் கண்டமையால் தண் சாரற் காளத்தி யாள் வார்நஞ் சுண் டமையால் உண்டிவ் வுலகு. எனவரும் பாடலில் நக்கீரதேவர் சுவைபெற விரித்துக் கூறியுள்ளார். இச்செய்யுள்,