பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672

பன்னிரு திருமுறை வரலாறு


ளுெருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த தென்பது பொருளாகக் கொள்க என்பர் நச்சிஞர்க்கினியர். இதனைப் புலவராற்றுப்படை யென்றபெயரால் வழங்குதல் வேண்டு மெனக்கருதுவர் சிலர் கூத்தராற்றுப்படை பாணுற்றுப் படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படையென ஏனைய ஆற்று படைகளெல்லாம் ஆற்றுப்படுத்துவோர் தலைமைதோன்ற அவர் பெயரால் வழங்குமாறு போல, முருகன் பால் முதுவாயிரவலனுகிய புலவனைப் புலமைச் செல்வரொருவர் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இத் திரு முருகாற்றுப்படையும் ஆற்றுப்படுத்துவோராகிய புலவர் பெயராற் புலவராற்றுப்படையென வழங்கப்பெறுதல் வேண்டுமென்பது அன்ளுேர்கருத்தாகும். புலவராற்றுப் படை யென்றபெயரால் நூல் நுதலிய சமயப்பொருள் விளங்கமாட்டாது போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத்தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இப்பனுவல் வழங்கலாயிற்றென்றும், இப்புது வழக்கம் பரவிவிட்ட காரணத்தால் புலவராற்றுப்படை யென்ற பழம்பெயர் வழக்கு வீழ்ந்ததாதல் வேண்டு மென்றும் மேற்கூறிய கருத்திற்கு விளக்கங் கூறுவதும் உண்டு. புலவராற்றுப்படை யென்றபெயர் திருமுருகாற்றுப் படைக்கு என்றும் வழங்கியதில்லை. நச்சிஞர்க்கினியர் காலத்தில் வாழ்ந்த அறிஞர் சிலர் புலவர சற்றுப்படை யென்றபெயரால் திருமுருகாற்றுப்படையை வழங்கத் தொடங்கிய நிலையில் ஆசிரியர் நச்சினர்க்கினியர் திரு முருகாற்றுப்படைக்கு அப்புதுப்பெயர் பொருந்தாதென எடுத்துக்காட்டித் தெருட்டி உள்ளார். " இதனைப் புலவராற்றுப்படையென்று உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படையென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க " எனப் புறத்திணை இயல் 36-ஆம் சூத்திரவுரையில் அவ்வாசிரியர் கூறுதலால் இச்செய்தி புலனுதல் காணலாம்.

மக்களுட் சிறப்பு உடைய தலைவைெருவன்பால் இரவலரை ஆற்றுப்படுத்தக்கருதிய கூத்தர் பாணர் முதலியோர், வறியோர்க்கு வழங்கும் அத்தலைவனது பெருவண்மையையும் தமக்கு அவன் அன்பினுற்செய்த ப்ேருதவியையும் அவனையடைதற்குரிய வழிதுறைகளைத் தாம் நன்குணர்ந்த பயிற்சியில்ை ஏனை இரவலரை அவன்